இந்தியா செய்தி

இந்தியாவில் மத பிரசங்கத்தின் போது நெரிசலில் சிக்கி 116 பேர் பலி

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் மத விழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 116பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஊடக அறிக்கையின்படி, ஹத்ராஸ் மாவட்டத்தின் சிகந்த்ரா ராவ் பகுதியில் உள்ள ரதி ஹான்பூர் கிராமத்தில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஆலயத்தில் ஒரு மத போதகர் தனது சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

குறித்த இடத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அங்கு வந்தவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, அதனை நிவர்த்தி செய்ய, மக்கள் அங்கிருந்து வெளியேற முயன்றனர்.

இதன்பேது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி