உலகம் செய்தி

சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறியுள்ளது – பலஸ்தீன முன்னணி தலைவர் ஆதங்கம்

  • February 7, 2026
  • 0 Comments

காசாவில் இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறியுள்ளதாக தெரிவித்த பலஸ்தீன தேசிய முன்னணி பொதுச் செயலாளர் முஸ்தபா பர்கோதி (Mustafa Barghouti) உலகம் இதனை கண்டுள்ளது என்றும் கூறியுள்ளார். கட்டார் தலைநகர் தோஹாவில் இன்று 17 ஆவது அல் ஜசீரா மன்றம் ஆரம்பமான நிலையில் இம்மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “காசாவில் போர் முற்றிலும் ஒருதலைப்பட்சமாக நடக்கிறது. இஸ்ரேல்ஏற்கனவே 1,500 க்கும் மேற்பட்ட முறைகள் சட்டத்தை […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

விருந்தினர்களுக்கு தனது விடுமுறை இல்லத்தை பரிந்துரைந்த மண்டேல்சன் – அடுத்தடுத்து வெளியாகும் மர்மங்கள்

  • February 7, 2026
  • 0 Comments

ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சுற்றிய சர்ச்சைகள் அவர் உயிரிழந்த பல ஆண்டுகளுக்குப் பின்னரும் புதிய திருப்பங்களை எடுத்து வருகின்றன. காலம் கடந்தும் வெளியாகும் அமெரிக்க நீதித்துறை ஆவணங்கள், அவருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் அரசியல் முக்கியஸ்தர்கள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்புகின்றன. அந்த வரிசையில், முன்னாள் தொழிற்கட்சி அமைச்சர் லோர்ட் பீட்டர் மண்டேல்சனின் பெயரும் தற்போது விவாதத்திற்குள் வந்துள்ளது. பிரித்தானியாவின் முன்னாள் தொழிற்கட்சி அமைச்சர் லோர்ட் பீட்டர் மண்டேல்சன், மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு, விருந்தினர்களை வரவேற்க […]

இலங்கை செய்தி

தங்கத்தின் விலை இன்றும் அதிகரிப்பு

  • February 7, 2026
  • 0 Comments

தங்கத்தின் விலை இன்று (07) 2000 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி, 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 392,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 22 கரட் தங்கம் ஒரு பவுண் 362,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,000 ரூபாவுக்கும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,325 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

எப்ஸ்டீனுடனான பிரத்தானிய அரச குடும்ப தொடர்புகள் வெளிச்சத்திற்கு – மீண்டும் சர்வதேச அளவில் பேசுபொருளானது

  • February 7, 2026
  • 0 Comments

ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சுற்றிய சர்ச்சைகள் அவர் உயிரிழந்த பின்னரும் ஓய்வதுபோல் தெரியவில்லை. காலம் கடந்தும் வெளியாவதாய் இருக்கும் புதிய ஆவணங்கள், அவர் அரச குடும்ப வட்டாரத்துடன் தொடர்பில் இருந்தாரா என்ற கேள்விகளை மீண்டும் எழுப்புகின்றன. பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய ஜெஃப்ரி எப்ஸ்டீன், பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் அலுவலகத்தை தொடர்புகொண்டு, தனது நண்பரான ஒரு பெண்ணுடன் இரவு உணவு ஏற்பாடு செய்ய முயன்றதாக புதிதாக வெளியான மின்னஞ்சல்கள் காட்டுகின்றன. 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அனுப்பப்பட்ட இந்த […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் தொடர்ச்சியாக பலத்த மழை – நூற்றுக்கணக்கான வெள்ள அபாய எச்சரிக்கைகள்

  • February 7, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் பல 82 பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் நிறுவனம் (EA) வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் 253 வெள்ள அபாய எச்சரிக்கைகள் அமலில் உள்ளன. வானிலை முன்னறிவிப்பின்படி, சனிக்கிழமை நாட்டின் பெரும்பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென்மேற்கு பகுதிகளிலும் தெற்கு வேல்ஸிலும் பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை சிறிதளவு மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த […]

இலங்கை செய்தி

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் 260 மில்லியன் டொலர் வருமானம்

  • February 7, 2026
  • 0 Comments

நாட்டின் இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடிந்ததாக இலவங்கப்பட்டை அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் 300 மில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை அடைவதற்குத் தமது நிறுவனம் எதிர்பார்ப்பதாக அந்தத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனக லிந்தர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலவங்கப்பட்டை தயாரிப்புகளுள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது ‘இலவங்கப்பட்டை சுருள்கள்’ ஆகும். இதன் மூலம் மாத்திரம் 251 மில்லியன் […]

விளையாட்டு

போராடி தோற்றது நெதர்லாந்து! பாகிஸ்தான் அணி வெற்றி!!

  • February 7, 2026
  • 0 Comments

T20 உலக்கிண்ண தொடரில் முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் போராடி தோற்றது நெதர்லாந்து அணி. கடைசி ஓவர் வரை நெதர்லந்து அணி பாகிஸ்தானுக்கு சவால் கொடுத்து அச்சுறுத்தியதால் போட்டியில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்கவில்லை. T-20 உலக்கிண்ண தொடர் இன்று ஆரம்பமானது. முதல் ஆட்டத்தில் ‘குரூப்-ஏ’ பிரிவில் உள்ள நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன. இலங்கையில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. இதற்கமைய நெதர்லாந்து […]

இந்தியா

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி மகிழ்ச்சி!

  • February 7, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் மிகச் சிறந்த செய்தி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ளார். ‘‘ இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஓர் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளோம். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வலுவான உறவுகளுக்கு காரணமாக இருக்கும் ஜனாதிபதி ட்ரம்ப்பின் தனிப்பட்ட அர்ப்பணிப்புக்கு நான் நன்றி கூறுகிறேன்.” எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தம், நமது கூட்டாண்மையின் ஆழம், நம்பிக்கை மற்றம் துடிப்பை பிரதிபலிக்கிறது. […]

இலங்கை செய்தி

தமிழர்களுக்கு தீர்வு கிடைக்க பிரிட்டன் துணை நிற்க வேண்டும்: மனோ கோரிக்கை!

  • February 7, 2026
  • 0 Comments

“ சர்வதேச சமூகம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி பங்காளிகள் ஆகிய அணிகளுக்கு பிரித்தானியா தலைமை பாத்திரம் வகித்து, தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்புகள் நிறைவேற உதவிட வேண்டும்.” இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் Tamil Progressive Alliance தலைவர் மனோ கணேசன் எம்.பி. Mano Ganesan கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்றூ பற்றிக்குடன் Andrew Patrick நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை […]

இந்தியா தமிழ்நாடு

தேர்தல் திருவிழாவுக்கு மத்தியில் 17 ஆம் திகதி இடைக்கால பாதீடு முன்வைப்பு!

  • February 7, 2026
  • 0 Comments

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், மாநில அரசாங்கத்தால் இடைக்கால அரசு – செலவுத்திட்டம் முன்வைக்கபடும் கால எல்லை அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி பாதீடு முன்வைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் திகதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், தேர்தல் நடவடிக்கை களை கட்டியுள்ளது. தேர்தல் நடைபெறவுள்ளதால் தமிழக அரசு 2026-27 நிதி ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டி உள்ளது. இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் […]

error: Content is protected !!