செய்தி

“வடக்கு, கிழக்கில் முகாம்கள் இருப்பதே தமிழர்களுக்கு பாதுகாப்பு” – மஹிந்த அணி கண்டுபிடிப்பு!

  • February 7, 2026
  • 0 Comments

” வடக்கு, கிழக்கில் படை முகாம்கள் இருப்பதாலேயே தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் உறுப்பினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார Shantha Bandara தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “சுதந்திரம் என்பது அபிமானம். அதன் கம்பீரத்தன்மையைக் குறை மதிப்புக்கு உட்படுத்தக்கூடாது. உலகில் எந்தவொரு நாடும் அவ்வாறு செய்யாது. ஆனால் இலங்கையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் சுதந்திரத்தினத்தின் கம்பீரத்தன்மை இல்லாமல் போயுள்ளது. செலவுகளை […]

இந்தியா செய்தி

உலகுக்கான இந்தியாவின் கொடையே தமிழ் மொழி – மலேசியாவில் மோடி பெருமிதம்

  • February 7, 2026
  • 0 Comments

உலகுக்கான இந்தியாவின் கொடை தமிழ் மொழி என்றும் தமிழ் இலக்கியம் நித்தியமானது என்றும் தமிழ் பண்பாடு உலகளாவியது என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்புக்கமைய இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக பிரதமர் நரேந்திர மோடி மலேசியா சென்றுள்ளார். இந்நிலையில் தலைநகர் கோலாலம்பூரில் பிரதமர் மோடியை அன்வர் இப்ராஹிம் வரவேற்றார். இந்திய வம்சாவளியினர் பெருமளவில் பங்கேற்ற சமூக நிகழ்ச்சியில் உரையாற்றிய அன்வர் இப்ராஹிம், ‘‘உங்கள் போராட்டத்தை நான் பின்தொடர்ந்து வருகிறேன். […]

ஐரோப்பா செய்தி

உக்ரைன்–ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய அமெரிக்கா அழுத்தம்

  • February 7, 2026
  • 0 Comments

ரஷ்யாவுடனான போரை ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய அமெரிக்கா விரும்புவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இரு தரப்பும் அடுத்த வாரம் அமெரிக்காவின் மியாமியில், பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உக்ரைன் மற்றும் ரஷ்யா குழுக்கள் அமெரிக்காவில் சந்திக்க வேண்டும் என அமெரிக்கா முதன் முறையாக முன்மொழிந்தது. எங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தி விட்டோம். தற்போது வொஷிங்டன் அல்லது மாஸ்கோவிலிருந்து உடனடி கருத்து இல்லை, ஆனால் அமெரிக்க ஜனாதிபதி […]

இலங்கை செய்தி

வாய்வெடி உட்கொண்ட யானை உயிரிழப்பு: விசாரணை தீவிரம்!!

  • February 7, 2026
  • 0 Comments

திருகோணமலை மொரவெவ- அவ்வைநகர் Morawewa-Avvainaga பகுதியில் வாய்வெடி உட்கொண்ட நிலையில் யானையொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. யானையின் வாய் வீக்கமாக காணப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. குறித்த யானை மரணித்தமை தொடர்பில் கிரிதல வனவிலங்கு திணைக்கள வைத்தியர் கலிங்கு ஆராய்ச்சி விசாரணையை முன்னெடுத்தார், வாய் வெடி உட்கொண்டமையினாலேயே குறித்த யானை உயிரிழந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இருந்த போதிலும் மொரவெவ பிரதேசத்தில் கடந்த வருடத்தில் மாத்திரம் ஆறு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் […]

இலங்கை செய்தி

கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட 21 வயது இளைஞன் – அறுவர் கைது

  • February 7, 2026
  • 0 Comments

ரத்மலானை, தர்மாராம வீதிப் பகுதியில் ரயில் வீதிக்கு அருகில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞர் கிரிக்கெட் மட்டை மற்றும் விக்கெட் தடிகளால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட அறுவர் கல்கிஸ்ஸ பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்மலானை, ஸ்ரீ தர்மாராம வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே […]

இலங்கை செய்தி

4 நாட்களுக்குள் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!

  • February 7, 2026
  • 0 Comments

இலங்கைக்கு கடந்த 04  நாட்களுள் மாத்திரம் 40 ஆயிரத்து 54 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். பெப்ரவரி 1 முதல் 04 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 5 ஆயிரத்து 287 பேரும், பிரிட்டனில் இருந்து 5ஆயிரத்து 184 பேரும், ரஷ்யாவில் இருந்து3 ஆயிரத்து 817 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். இலங்கையின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாத்துறை […]

uber-8-5-million-payout-lawsuit-arizona-tamil-news அல்லது uber-ordered-to-pay-8-million-rape-case-verdict அறிவியல் & தொழில்நுட்பம் உலகம்

உபெர்க்கு அபராதம்: பயணிக்கு ரூ. 71 கோடி (LKR 240 கோடி) இழப்பீடு!

  • February 7, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் அரிசோனா மாநில நீதிமன்றம், உபெர் (Uber) நிறுவனம் தனது பயணி ஒருவருக்கு $8.5 மில்லியன் (சுமார் ₹71 கோடி) இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அரிசோனாவில் விமானப் பணிப்பெண் (Flight Attendant) பயிற்சிக்கான பட்டமளிப்பு விழாவை முடித்துவிட்டு, ஜெயிலின் டீன் (Jaylynn Dean) என்ற 19 வயது இளம்பெண் தனது விடுதிக்குச் செல்ல உபெர் கார் முன்பதிவு செய்துள்ளார். பயணத்தின் இடையே, ஓட்டுநர் ஹசன் துரே (Hassan […]

இலங்கை செய்தி

“படையினரை அவமதித்த தரப்பே தற்போது அபிமானம் பற்றி கதைக்கிறது”

  • February 7, 2026
  • 0 Comments

“படையினரை மணல் மூட்டை அடுக்குவதற்கு அன்று பயன்படுத்தியவர்களே, இன்று படையினருக்குரிய அபிமானம் பற்றி கதைக்கின்றனர்.” என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர Aruna Jayasekara தெரிவித்தார். சுதந்திர தின அணிவகுப்பின்போது போரை முடிப்பதற்கு படையினர் வழங்கிய பங்களிப்பு பற்றி பேசப்படவில்லை என மஹிந்த அணி குற்றஞ்சாட்டிவருகின்றது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் கூறியவை வருமாறு, “ முப்படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் அபிமானம் என்னவென்பது எமக்கு தெரியும். அதனை நாம் பாதுகாப்போம். […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

எப்ஸ்டீன் விவகாரம் – ஸ்டார்மர் நேர்மையான மனிதர் என முன்னாள் பிரதமர் புகழாரம்

  • February 7, 2026
  • 0 Comments

பிரதமரும் தொழிற்கட்சி தலைவருமான சர் கெய்ர் ஸ்டார்மர் தற்போது எதிர்கொள்ளும் அரசியல் சூழல், மிகவும் தீவிரமானது என பிபிசி ரேடியோ 4 இன் இன்றைய நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுன் (Gordon Brown) அறிவித்துள்ளார். பீட்டர் மண்டேல்சன் தொடர்பான சர்ச்சையில், சரியான நடவடிக்கைகளை எடுக்க ஸ்டார்மர் தாமதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நேர்மையான மனிதர் என ஆதரித்து, மண்டேல்சனால் அவர் ஏமாற்றப்பட்டவர் என்றும் கூறியுள்ளார். மேலும், அரசியல் அமைப்பில் ஏற்பட்டுள்ள ஊழல் […]

விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி – ஸ்கொட்லாந்து அணியை வீழ்த்தியது

  • February 7, 2026
  • 0 Comments

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (07) நடைப்பெற்ற 2026 டி20 உலகக் கிண்ணத் தொடரின் 2 ஆவது லீக் ஆட்டத்தில், ஸ்கொட்லாந்து அணியை 35 ஓட்டங்களால் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப் பெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷாய் ஹோப் மற்றும் பிரண்டன் கிங் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். […]

error: Content is protected !!