ஐரோப்பா

பிரித்தானியாவில் வாகன ஓட்டிகளுக்கு சவாலாக வரும் வேக கெமராக்கள்!

  • May 4, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் வளர்ந்துவரும் தொழில்நுட்ப சந்தையில் மிகப் பெரிய சவாலாக இருப்பது வேக கெமராக்கள் தான். இந்த கெமராக்கள் அனைத்தும் வரும் ஒக்டோபர் மாதம் 2026 இற்குள் வர்ணம் தீட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வர்ணம் தீட்டினால் தொலைதூரத்தில் உள்ள அந்த கெமராக்களை பார்ப்பது கடினமாகிவிடும். ஆனால் அந்த கெமராக்கள் இலகுவாக எங்களை படம்பிடிக்கலாம். இதனால் சாலை விதிகளை மீறுவோர் துள்ளியமாக அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். ஓட்டுநர்களுக்கு அச்சமூட்டும் வகையில், 1,000 மீட்டர் தொலைவில் இருந்து வாகனத்தில் செல்லுபவர்கள் […]

செய்தி

2023 சைபர் தாக்குதல்கள் : ரஷ்ய தூதருக்கு சம்மன் அனுப்பிய ஜெர்மனி

ஆளும் சமூக ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அதன் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறை உறுப்பினர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் இணையத் தாக்குதல்கள் தொடர்பாக ரஷ்ய உயர்மட்ட தூதரை ஜெர்மனி அழைத்துள்ளது. “ரஷ்யாவின் இராணுவ புலனாய்வு சேவையால் வழிநடத்தப்படும் APT28 என்ற குழுவிற்கு இந்த சைபர் தாக்குதலுக்கு காரணம் என்று இன்று நாம் சந்தேகத்திற்கு இடமின்றி கூறலாம்” என்று ஜேர்மன் வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். “வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது ஜேர்மனியின் […]

ஐரோப்பா

இங்கிலாந்தின் தெற்கு யார்க்ஷயரில் தொழிற்கட்சி அமோக வெற்றி!

  • May 4, 2024
  • 0 Comments

தெற்கு யார்க்ஷயர் மேயர் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆலிவர் கோப்பார்ட் வெறும் 50% வாக்குகளைப் பெற்று மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். டோரி வேட்பாளர் நிக் ஆலன் 16.5% வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார், அதைத் தொடர்ந்து டக்ளஸ் ஜான்சன் (கிரீன்ஸ்) 13.6% பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். வாக்குப்பதிவு மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளது.  இருப்பினும் வெறும் 27.27% வாக்காளர்களே வாக்களித்தனர்.

இந்தியா

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா! வேட்புமனுவில் வெளியான தகவல்

உத்தரப் பிரதேசம் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே இன்று காலை வெளியிட்டார். ரேபரேலி தொகுதியில் ராகுல், அமேதி தொகுதியில் கேஎல் சர்மா போட்டியிடுவதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தபோது சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரும் உடன் இருந்தனர். ஏற்கனவே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி […]

பொழுதுபோக்கு

மக்களே இவங்கள மறந்துடீங்களா? திரும்ப வந்துட்டாங்க….

  • May 4, 2024
  • 0 Comments

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் கண்ணான கண்ணே. இந்த சீரியல் மூலம் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன்  கதாநாயகியாக அறிமுகமானார். மக்கள் மத்தியில் வெற்றிகரமான சீரியலாக இருந்த கண்ணான கண்ணே 722வது எபிசோடில் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலுக்கு பின் நடிகை நிமேஷிகா மீண்டும் தமிழில் எந்த ஒரு சீரியலிலும் நடிக்கவில்லை. இந்த நிலையில், விரைவில் சன் தொலைக்காட்சியில் புதிதாக அவள் ஒரு தேவதை எனும் சீரியல் ஆரம்பமாக இருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடிகை நிமேஷிகா தான் […]

ஆப்பிரிக்கா

ஐ.நாவின் வலியுறுத்தலுக்கு அமைய வரிகளை நீக்கியது சூடான்!

  • May 4, 2024
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் சபையின் முறையீட்டைத் தொடர்ந்து, தெற்கு சூடான் சமீபத்தில் விதிக்கப்பட்ட வரிகள் மற்றும் கட்டணங்களை நீக்கியுள்ளது. நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியில் இருந்து வரும் உதவியை நம்பி உள்ளனர். பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரிகளை நீக்குமாறு ஐ.நா அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். முன்னதாக சாலை வழியாக அணுக முடியாத பகுதிகளில் வசிக்கும் 60,000 பேருக்கு உணவு வழங்களில் சிக்கல் நிலவியதாக ஐ.நா அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

சீன ஜனாதிபதி ஐரோப்பாவுக்கு விஜயம்!

5 ஆண்டுகளுக்கு பிறகு சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் ஐரோப்பாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். ஐரோப்பாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நல்லுறவு நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில் சீன ஜனாதிபதி குறித்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது சீன ஜனாதிபதி பிரான்ஸ், சேர்பியா மற்றும் ஹங்கேரிக்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பல உளவு ஊழல்கள் மற்றும் உக்ரைனில் நடந்த போரில் ரஷ்யாவிற்கு சீனா தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகப் […]

ஆசியா

நிலவின் இருண்ட பகுதிக்கு விண்கலத்தை அனுப்பிய சீனா!

  • May 4, 2024
  • 0 Comments

கண்ணுக்கு தெரியாத நிலவின் இருண்ட பகுதி என்று அழைக்கப்படும் நிலவின் தொலைதூர பகுதிகளில் இருந்து மாதிரிகளை சேகரிக்க சீனா புதிய பணியை தொடங்கியுள்ளது. லாங் மார்ச்-5 ஒய்8 ராக்கெட் ஆளில்லா சாங் யி சிக்ஸை சுமந்து கொண்டு வெங்சான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது. 53 நாள் பணியானது சந்திரனின் தொலைதூர பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 2 கிலோ மாதிரிகளை பகுப்பாய்வுக்காக பூமிக்கு கொண்டு வரும். சந்திரன் எப்படி உருவானது என்பது குறித்த உண்மைகளை வெளிப்படுத்தும் என்று […]

ஆஸ்திரேலியா

பப்புவா நியூ கினியாவில் 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

  • May 4, 2024
  • 0 Comments

பப்புவா நியூ கினியாவில் உள்ள பங்குனாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பங்குனாவின் மெற்கு- வட மேற்கு திசையில் 153 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது 170 கி.மீ. ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், 5.64 டிகிரி தெற்கு அட்சரேகை மற்றும் 154.27 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் […]

இலங்கை

இலங்கையின் முக்கிய சுற்றுலா இடமொன்றுக்கு வெளிநாட்டினருக்கு மாத்திரமே அனுமதி

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நிறைவடைந்த பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என சபரகமுவ மாகாண பிரதான சங்கைக்குரிய தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்துள்ளார். நல்லதண்ணி பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாத்திரை காலம் நிறைவடைந்த பின்னர் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் சிவனொளிபாதமலைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், அங்கு இடம்பெறும் சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் விசாகப் […]

error: Content is protected !!