ஆப்கானின் பாக்லான் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் ; 200 ஆக உயர்ந்த பலியோனர் எண்ணிக்கை
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு மாகாணமான பாக்லானில் நேற்று பெய்த கனமழையில் 200 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கனமழை காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக புலம்பெயர்ந்தோர்களுக்கான ஐநாவின் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. பாக்லானி ஜாதித் மாவட்டத்தில் மட்டும் 1500 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் தலிபான் அரசு 62 பேர் உயிரிழந்ததாக நேற்றிரவு தெரிவித்திருந்தது. ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. தகார் மாகாணத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு மாகாணம் […]













