பொழுதுபோக்கு

வாரணம் ஆயிரம் படத்தில் இருந்து விலகிய பாலிவுட்டின் டாப் நடிகை.. ரகசியத்தை உடைத்தார் கௌதம் மேனன்

  • March 21, 2024
  • 0 Comments

படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மேக்னா கதாபாத்திரத்தில் சமீரா ரெட்டி நடித்திருப்பார். ஆனால், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பாலிவுட் நட்சத்திரம் ஒருவர் தான் தேர்வு செய்யப்பட்டாராம். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மேக்னா கதாபாத்திரத்தில் சமீரா ரெட்டி நடித்திருப்பார். ஆனால், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பாலிவுட் நட்சத்திரம் தீபிகா படுகோனேவிடம் தான் பேச்சுவார்த்தை நடந்ததாம். ஆனால், அப்போது அவர் ‘ஓம் ஷாந்தி ஓம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானதால் வாரணம் ஆயிரம் படத்தில் நடிக்க முடியாமல் போனது என்றும் […]

இலங்கை

இலங்கையில் உயரும் வெங்காயத்திற்கான விலை : புதிய வழி கண்டுப்பிடிப்பு!

  • March 21, 2024
  • 0 Comments

இலங்கையில் பெரிய வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன்படி ஒரு கிலோ பெரிய வெங்காயமானது 500 – 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள நிலையில், இலங்கையில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சீனாவிடம் இருந்து வெங்காயத்தை கொள்வனவு செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி இன்னும் 05 நாட்களில் இறக்குமதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையும். இதற்கு […]

இந்தியா

வெப்பமான வானிலை : கர்ப்பிணி பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • March 21, 2024
  • 0 Comments

அதிக வெப்பமான காலநிலையில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயம் அதிகம் என்று இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. சென்னையில் உள்ள உயர்கல்வி நிறுவனம் ஒன்று 800 கர்ப்பிணிப் பெண்களைக் கொண்டு நடத்திய ஆய்வில் மேற்படி தெரியவந்துள்ளது. ஏராளமான பெண்கள் விவசாயம், செங்கல் உற்பத்தி மற்றும் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பெண்களில், 5 சதவீதம் பேர் கருச்சிதைவுகளை அனுபவித்தனர், அதே நேரத்தில் இறந்த பிறப்புகள் மற்றும் முன்கூட்டிய பிறப்புகள் 6.1 சதவீதமாக பதிவு […]

இந்தியா

அசாமில் ISIS பயங்கரவாத அமைப்பின் இந்தியத் தலைவர் உட்பட இருவர் கைது!

  • March 21, 2024
  • 0 Comments

ISIS பயங்கரவாத அமைப்பின் இந்திய தலைவர் உட்பட பயங்கரவாத பின்னணி கொண்ட இரு நபர்கள் அசாம் மாநிலத்தில் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மக்களவைத் தேர்தலுக்கு தேசம் பரபரப்பாக தயாராகி வருகிறது. உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவாக பார்க்கப்படும் இந்தியாவின் பொதுத்தேர்தல் சூழலை சீர்குலைக்கும் நோக்கத்தில் பயங்கரவாதிகளும் பரபரப்பாக நாசகர திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்காக அண்டை நாடுகளில் பயிற்சி பெற்று இந்தியாவுக்குள் ஊடுருவும் இந்த நபர்களை வளைக்க எல்லை மாநிலங்களின் போலிஸார் முதல் தேசிய பாதுகாப்பு முகமையான […]

ஆஸ்திரேலியா

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகள் தொடர்பில் அவுஸ்திரேலியா வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • March 21, 2024
  • 0 Comments

அவுஸ்திரேலியா வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை இந்த வாரம் முதல் அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிற்கு வந்துள்ள குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியேற்றவாசிகளின் வருகை அதிகரிப்பால், நாட்டின் வாடகை வீட்டுச் சந்தையின் போட்டித்தன்மை எதிர்பாராத வகையில் வளர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பட்டதாரி விசாக்கள் மற்றும் மாணவர் விசாக்களுக்கான ஆங்கில மொழித் தேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் சர்வதேச மாணவர்களுக்கு உணவு வழங்கும் நிறுவனங்கள் தொடர்ந்து விதிகளை மீறினால் […]

ஆசியா

ஜப்பானில் 5.3 ரிக்டர் அளவுகோலில் பதிவான பாரிய நிலநடுக்கம்..

  • March 21, 2024
  • 0 Comments

‘ரிங்க் ஆப் பயர்’ எனப்படும் புவி தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் பகுதியில் ஜப்பான் இருப்பதால் அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகும். இந்நிலையில் ஜப்பானின் கிழக்கில் உள்ள இபராக்கி மாகாணம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (J.M.A) தெரிவித்துள்ளது. ஜப்பானின் இபராக்கி மாகாணத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் இதுவரை உயிர் […]

இலங்கை

இலங்கை அதிகாரிகளுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்!

  • March 21, 2024
  • 0 Comments

சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார நெருக்கடி காரணமாக, 2022 முதல் இலங்கை கடனை செலுத்தத் தவறியிருந்தது. $12 பில்லியன் மதிப்புள்ள பத்திரங்கள் மறுசீரமைக்க முன்மொழியப்பட்டதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடத்தில் நடைபெறவுள்ள நிலையில், கூடிய விரைவில் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு இரு தரப்பும் இலக்கு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொழுதுபோக்கு

100க்கு 100 பொருத்தம் – இளையராஜாவாகவே மாறிய தனுஷ்.. தீயாக பரவும் புகைப்படம்

  • March 21, 2024
  • 0 Comments

நடிகர் தனுஷ் அடுத்ததாக இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க உள்ளார். அது தொடர்பான அறிமுக நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இளையராஜா படத்தின் அறிவிப்புடன் நடிகர் தனுஷ் லுக்கில் பின்னாடி திரும்பி இருப்பது போன்ற போஸ்டர் வெளியானது. நிலையில் இளையராஜா போலவே நடிகர் தனுஷ் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தான் இந்த படத்தை இயக்க உள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு […]

விளையாட்டு

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை ஆரம்பம்!

  • March 21, 2024
  • 0 Comments

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது. குறித்த தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி சென்னையில் நாளை இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் நாளைய முதலாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் மதீஷ பத்திரன விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது. உபாதையில் இருந்து மதீஷ பத்திரன இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தினால், அவர் நாளைய போட்டியில் இடம்பெறமாட்டார் என […]

பொழுதுபோக்கு

விஜய் ஏன் இப்படி ஆகிட்டார்? எல்லாம் அரசியல் தான் காரணமா?

  • March 21, 2024
  • 0 Comments

விஜய் GOAT படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்று இருக்கிறார். தமிழ்நாட்டைப் போலவே, கேரளாவிலும் அவருக்கு ரசிகர்கள் ரொம்ப அதிகம். எப்போதுமே அவருக்கு அங்கு நல்ல வரவேற்பு இருக்கும். விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததற்கு பிறகு முதல் முறையாக கேரளாக்கு சென்று இருக்கிறார். அதிலும் தளபதி 69 படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகுகிறேன் என அறிவித்து இருக்கிறார். இதனால் இந்த முறை கேரளாவில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. விஜய் முதல் நாள் திருவனந்தபுரம் […]

error: Content is protected !!