பொழுதுபோக்கு

வாரணம் ஆயிரம் படத்தில் இருந்து விலகிய பாலிவுட்டின் டாப் நடிகை.. ரகசியத்தை உடைத்தார் கௌதம் மேனன்

படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மேக்னா கதாபாத்திரத்தில் சமீரா ரெட்டி நடித்திருப்பார். ஆனால், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பாலிவுட் நட்சத்திரம் ஒருவர் தான் தேர்வு செய்யப்பட்டாராம்.

படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மேக்னா கதாபாத்திரத்தில் சமீரா ரெட்டி நடித்திருப்பார். ஆனால், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பாலிவுட் நட்சத்திரம் தீபிகா படுகோனேவிடம் தான் பேச்சுவார்த்தை நடந்ததாம்.

ஆனால், அப்போது அவர் ‘ஓம் ஷாந்தி ஓம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானதால் வாரணம் ஆயிரம் படத்தில் நடிக்க முடியாமல் போனது என்றும் அவருக்கு பதிலாக சமீரா ரெட்டி கமிட்டானார் என்று படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் கூறியுள்ளார்.

புதுவிதமான ஸ்டைலிஷ் மேக்கிங்குக்கு பெயர் போனவர் கௌதம் வாசுதேவ் மேனன். நடிகர் சூர்யா, சமீரா ரெட்டி, சிம்ரன் நடித்த இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் காதலுக்கு ஒரு புதுவிதமான கோணத்தை காட்டியிருப்பார் கௌதம் மேனன். பள்ளி மாணவன், கல்லூரி மாணவன், ராணுவ வீரர் என மூன்று விதமான கதைக்களத்தில் அதற்கு ஏற்றார் போல் கதாபாத்திரத்திற்கு மெருகேற்றியிருப்பர் நடிகர் சூர்யா.

‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை..’ என இளசுகள் பலருக்கும் இந்த பாடல்பேரரைட்டாக இருந்தது. மேக்னாவை கண்டதும் தொற்றிக்கொள்ளும் காதலை மிகவும் அழகாக காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர்.

இப்படி திரைக்கதை, இசை, பாடல் என சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த வாரணம் ஆயிரம் படம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் இயக்குனர் கௌதம் மேனன்.

யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் தந்த பேட்டியில் அவர் கூறும்போது, படத்தில் சூர்யாவின் தந்தை வேடத்தில் நடிக்க, மோகன் லால், நானே பட்டேகர் இவர்களில் ஒருவரை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருந்தது.

ஒரே நடிகர் இரட்டை வேடங்களில் நடிப்பதில் உடன்பாடில்லாதவன் நான், அப்போது நடிகர் சூர்யா தந்தை கதாபாத்திரத்தை தானே நடிப்பதாக கூறி என்னை ஒப்புகொள்ள வைத்தார். அதே போல் அந்த கதாபாத்திரத்தை அவர் சிறப்பாக செய்தார் என்று கௌதம் மேனன் கூறினார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்