இலங்கை

குருநாகல் பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்த பயணிகள் பேரூந்து..

  • March 27, 2024
  • 0 Comments

குருநாகல் மல்கடுவாவ பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. மாதம்பேயில் இருந்து கம்பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயினால் பஸ் சேதமடைந்துள்ளதுடன், பிரதேசவாசிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். அதனையடுத்து, குருநாகல் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.

வட அமெரிக்கா

கனடா – சஸ்கற்றுவானில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட நான்கு சடலங்கள்!!

  • March 27, 2024
  • 0 Comments

கனடாவின், சஸ்கற்றுவானில் நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. தென் சஸ்கற்றுவானின் கிராமிய வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கனடிய பொலிஸார் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்தில் வயது வந்தவர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழந்தவர்களின் மரணங்கள் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும், இந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா

பிஜி தீவில் 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்.. வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி!

  • March 27, 2024
  • 0 Comments

பிஜி தீவில் இன்று காலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. தென் பசிபிக் கடலில் நியூசிலாந்து அருகே பிஜி தீவுகள் உள்ளது. நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கும் நாடுகளின் பட்டியலில பிஜி தீவுகள் இடம் பெற்றுள்ளது. இங்கு அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கத்தால் மக்கள் தங்கள் உடமைகளையும், உயிர்களையும் இழந்து வருகின்றனர். இந்த நிலையில், பிஜி தீவின் தலைநகர் சுவா பகுதியில் இன்று காலை 6.58 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் […]

ஐரோப்பா

பிரிட்டிஷ் அருங்காட்சியக கண்காணிப்பாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

  • March 27, 2024
  • 0 Comments

பிரிட்டிஷ் அருங்காட்சியகம் தனது சேகரிப்பில் இருந்து நூற்றுக்கணக்கான தொல்பொருட்களைத் திருடி ஆன்லைனில் விற்பனைக்கு வழங்கியதாகக் கூறப்படும் முன்னாள் கண்காணிப்பாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 2023 இல் 1,800 க்கும் மேற்பட்ட பொருட்கள் காணாமல் போனதைக் கண்டறிந்த பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்ட பீட்டர் ஹிக்ஸ் மீது அருங்காட்சியகம் வழக்குத் தொடர்ந்தது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அருங்காட்சியகத்தின் வழக்கறிஞர்கள், ஹிக்ஸ் ஒரு தசாப்த காலப்பகுதியில் ஸ்டோர்ரூம்களில் இருந்து பழங்கால ரத்தினங்கள், தங்க நகைகள் மற்றும் […]

இலங்கை

சீனா – இலங்கைக்கு இடையில் 09 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

  • March 27, 2024
  • 0 Comments

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 9 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. சீன பிரதமர்  லி குவாங் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன தியனன்மென் சதுக்கத்தில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தியதன் பின்னர் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இருதரப்பு கலந்துரையாடலில் பொருளாதார ஒத்துழைப்புக்கு மேலதிகமாக சமூக, கலாச்சார, கல்வி மற்றும் விவசாயத் துறைகளில் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை உருவாக்குவது குறித்தும் அதிக […]

பொழுதுபோக்கு

கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஜரகண்டி பாடல் எப்படி இருக்கு?

  • March 27, 2024
  • 0 Comments

இயக்குநர் ஷங்கர் படங்களுக்கு அதிகம் செலவு செய்வதை விட பாடல்களுக்கு அதிக செலவு செய்து விடுவார். நண்பன், ஐ, 2.0 படங்கள் சொதப்பிய நிலையில் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை பல வருடங்களாக இயக்கி வருகிறார். அந்த படம் திடீரென கிடப்பில் போடப்பட்ட நிலையில், தெலுங்கில் ராம்சரண், கியாரா அத்வானியை வைத்து கேம் சேஞ்சர் படத்தை ஆரம்பித்த ஷங்கர் மீண்டும் இந்தியன் 2 படம் தொடங்கிய நிலையில், கேம் சேஞ்சர் படத்தையும் தாமதப்படுத்தி வருகிறார். ராம்சரண் […]

செய்தி

இலங்கையில் 07 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்

  • March 27, 2024
  • 0 Comments

07 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சிறுமியின் உறவினர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டதாக பள்ளம பொலிஸார் தெரிவிக்கின்றனர். 77 மற்றும் 19 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் ஆனமடுவ, அதிகம மற்றும் பரப்பந்தோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களில் ஒருவர் சிறுமியின் தாத்தா எனவும், மற்றைய சந்தேக நபர் சிறுமியின் தாயின் சகோதரியின் பிள்ளை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். […]

ஐரோப்பா

தாக்குதல் பின்னணியில் 3 நாடுகளின் சதி – ரஷ்ய உளவுத் துறை தகவல்

  • March 27, 2024
  • 0 Comments

மொஸ்கோ இசை அரங்கத்தில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் பின்னணியில் 3 நாடுகள் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ஆகிய நாடுகளின் சதி இருப்பதாக ரஷ்ய உளவுத் துறை குற்றம் சாட்டியுள்ளது. உளவு பாதுகாப்புத் துறை தலைவர் அலெக்ஸாண்டர் போர்ட்டினிகோவிடம் தாக்குதலின் பின்னணி குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதன் போது இதனைக் கூறிய அவர், தங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இத்தகைய கேள்வி எழுவதாகக் கூறினார்.

ஐரோப்பா

பிரான்ஸில் தனிமையில் வீட்டில் இருந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • March 27, 2024
  • 0 Comments

பாரிஸில் எஸோன் நகரில் உள்ள வீடு ஒன்று தீப்பற்றி எரிந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சனிக்கிழமை நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் நேற்றைய தினமே பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளது. மார்ச் 23-24 ஆம் திகதிக்குட்பட்ட இரவில் 2 மணி அளவில் தீ பரவியுள்ளது. தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால் நிலமை ஏற்கனவே கைமீறிச் சென்றிருந்தது. வீடு முற்றாக தீக்கிரைக்குள்ளாகி 61 வயதுடைய பெண் ஒருவர் […]

பொழுதுபோக்கு

CSK வீரருடன் காதலா? உண்மையை போட்டுடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை

  • March 27, 2024
  • 0 Comments

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரை காதலிப்பதாக பரவிய தகவல் குறித்து பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார். விஜய் டிவியில் டிஆர்பி-யில் சக்கைப்போடு போட்டு வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சன் டிவி சீரியல்களுக்கே சவால்விடும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதை உடன் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் இனியா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நேஹா. கேரளாவை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் பள்ளி மாணவியாக இந்த சீரியலில் அறிமுகமானார். தற்போது […]

error: Content is protected !!