இந்திய அரசால் வழங்கப்பட்ட பேரூந்துகள்; இன்று யாழில் மீள கையளிப்பு நிகழ்வு
இந்திய அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புதிய பேருந்துகள் கொழும்பில் வைத்து உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் மீள கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (13) இடம்பெறவுள்ளது வடக்கு மாகாணங்களின் ஓவ்வொரு மாவட்டங்களிலுள்ள இ.போ.ச.க்கு சொந்தமான சாலைகளுக்கும் கிராமிய மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்த இந்திய அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம் புதிய பேருந்துகள் வழங்கப்பட்டிருந்தது. அந்தவகையில் வவுனியா 04, யாழ்ப்பாணம் 04 ,கிளிநொச்சி 04,மன்னார் 03, முல்லைத்தீவு 03,பருத்தித்துறை 03, காரைநகர். […]













