ஆசியா

பாகிஸ்தான் போராளிக் குழு நடத்திய தாக்குதலில் 10 எல்லைக்காவல் படையினர் உயிரிழப்பு !

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 எல்லை காவல்படையினர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் வட மேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் தேரா இஸ்மாயில் கான் நகருக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரிகளுக்கு எதிராக நேற்று (அக். 24) தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில், குறைந்தது 10 பேர் உயிரிழந்துவிட்டதாக கைபர் பக்துன்வா காவல்துறையும் மாநில முதல்வர் அலி அமின் கந்தாபுரும் இன்று தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக் இ பாகிஸ்தான் தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தங்கள் அமைப்பைச் சேர்ந்த உஸ்தாத் குரேஷி கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கும் நோக்கில் இந்த தாக்குதலை நிகழ்த்தியதாக அந்த அமைப்பு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை ஒட்டிய பஜோர் மாவட்ட எல்லையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் குரேஷி உள்ளிட்ட 9 பேர் சமீபத்தில் கொல்லப்பட்டனர்.

தாக்குதலை உறுதி செய்த மூன்று மூத்த காவல்துறை அதிகாரிகள் ஏராளமானோரை உள்ளடக்கிய பெரிய போராளிக் குழு ஒன்று எல்லைக்காவல் படையினரின் புறநகர் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறினர்.

தாக்குதல் நடைபெற்ற கைபர் பாக்துன்வா மாநில முதலமைச்சர் அலி அமின் கான் கன்டாபுர், சம்பவத்தைக் கண்டித்து வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) அறிக்கை வெளியிட்டார். இருப்பினும் எத்தனை பேர் உயரிழந்தனர் என்ற விவரம் அந்த அறிக்கையில் இடம்பெறவில்லை.

இதற்கிடையே, மூத்த தலைவரான உஸ்தாத் குரேஸி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ‘தெரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP)‘ போராளிக் குழு தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்