இந்தியா செய்தி

மைசூரில் தோசை சுட்ட பிரியங்கா காந்தி

காங்கிரஸ் கட்சியின் பொது செயலர் பிரியங்கா காந்தி மைசூரில் ஹோட்டலில் தோசை சுட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்கள் வைரலாகியுள்ளது.

மைசூரு-தேர்தல் பிரசாரத்துக்காக கர்நாடகா வந்துள்ள அவர் தோசை சுட்டுள்ள படங்கள் சமூக ஊடகங்கள் வைரலாகியுள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தலை ஒட்டி, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, பிரியங்கா காந்தி கர்நாடகா வந்துள்ளார். நேற்று முன்தினம் நடந்த காங்கிரஸ் மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டார்.

இந்த நிலையில, நேற்று காலை மைசூரு அக்ரஹாரா சாயாஜி ராவ் ரோட்டில் உள்ள, 80 ஆண்டுகள் பழமையான மைலாரி ஹோட்டலுக்கு அவர் சாப்பிட சென்றுள்ளார்.

அவரை ஹோட்டல் ஊழியர்கள் வரவேற்றனர். நேராக சமையல் அறைக்கு சென்ற பிரியங்கா, அங்கு இருந்த மாவை எடுத்து, தோசை கல்லில் ஊற்றி, தோசை சுட்டுள்ளார்.ஷ

ஹோட்டல் ஊழியர்களுடனும், அங்கு சாப்பிட வந்தவர்களுடனும் கலந்துரையாடினர். ஹோட்டலுக்கு சாப்பிட வந்த, குழந்தைகளுடனும் கொஞ்சி பேசினார்.

பின் தோசை சாப்பிட்டு விட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி