இலங்கை

மின் கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிப்பு!

மின் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் (PUCSL) ஆணைக்குழு இன்று  அறிவித்துள்ளது.

நாளை நள்ளிரவு முதல் விலை உயர்வு  அமுலுக்கு வரவுள்ளது.

குறிப்பாக, மாதந்தோறும் 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் வீட்டு உபயோக நுகர்வோரை இலக்காகக் கொண்டு இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 180 அலகுகளுக்கும் குறைவாகப் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பயனர்களுக்கு விலை திருத்தம் எதுவும் இருக்காது என்றும், இதன்மூலம் பெரும்பாலான குடும்பங்கள் இந்த விலை உயர்வால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் மின் உற்பத்தி செலவுகளால் ஏற்படும் 38 பில்லியன் ரூபாய் வருவாய் பற்றாக்குறையை  சமாளிப்பதற்காகவே இந்தக் கட்டண உயர்வு  அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும்  உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தால் 05 சதவீதமானோரே பாதிக்கப்படுவார்கள் என்றும்,   95 சதவீதமான  மக்கள் அதிக செலவுகளிலிருந்து திறம்பட பாதுகாக்கப்படுவார்கள் என்றும் PUCSL உறுதிப்படுத்தியுள்ளது.

 

 

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!