தாய்லாந்தில் ரயிலுடன் மோதிய பேருந்து – பாரிய தீவிபத்தில் பலர் பலி!
தாய்லாந்தின் பாங்கொக் நகரில் ரயில் ஒன்றுடன் பயணிகள் பேருந்து ஒன்று மோதி தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்து இன்று நிகழ்ந்துள்ளது.
இதில் 08 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருபதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தினால் அருகில் இருந்து கார் உள்ளிட்ட வாகனங்களும் தீவிபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் முழுவீச்சில் பணியாற்றி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




