கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக என். சரவணபவன்
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக டொக்டர் என்.சரவணபவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் இன்று (16) இந்நியமனக் கடிதத்தினை அமைச்சர் டொக்டர் நளிந்த ஐயதிஸ்ஸ வழங்கி வைத்தார்.
வாழைச்சேனை தள வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி வந்த வேளை சிரேஷ்ட வகாரணமாகஸ நிர்வாகத்துறையில் ஏற்பட்ட ஆளணி பற்றாக்குறை காரணமாக கடந்த 2026 06மாதம் 04 திகதி நேர்முகப் பரீட்சை இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இவர் குறித்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட நிலையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அணில் ஜெயசிங்க முன்னிலையில் குறித்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது




