கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் அளித்த பதிலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி தெரிவித்ததன் காரணமாகவே கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 104.1 டொலராகவும், ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 98.51 டொலராகவும் பதிவாகியுள்ளது.




