இம்ரான்கானின் முன்னாள் மனைவி மறுமணம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவியும், பிரித்தானிய திரைப்படத் தயாரிப்பாளருமான ஜெமிமா கோல்ட்ஸ்மித் (Jemima Goldsmith), ஆஸ்திரேலிய நிதியாளரான கேமரூன் ஓ’ரெய்லியை (Cameron O’Reilly) திருமணம் செய்துகொண்டுள்ளார். இம்ரான் கானைப் பிரிந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் மறுமணம் செய்துள்ளார். 52 வயதான ஜெமிமா மற்றும் 62 வயதான கேமரூன் ஆகியோரின் திருமணம் வாரயிறுதியில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. ஜெமிமாவின் அண்ணி ஜெமிமா ஜோன்ஸ், திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, “ஜெமிமா மற்றும் […]













