சிறைச்சாலைகளில் நடந்தது என்ன? அரசு விளக்கம்
சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருந்த அமைதியற்ற சூழ்நிலை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மகசின் மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளில் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், பள்ளன்சேன சிறைச்சாலையிலும் நிலைமை சீரடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் மேலும் உரையாற்றுகையில்: ” நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலையடுத்து மஹர சிறைச்சாலையிலும் குழப்பம் ஏற்பட்டது. அதேபோல மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு அமைதியின்மை ஏற்பட்டது. இன்று காலை […]













