இலங்கை

இலங்கை – நள்ளிரவில் காணக்கிடைக்கும் அரிய வாய்ப்பு : விண்கல் மழை பொழியும்!

தெற்கு டெல்டா அக்வாரி (Southern Delta Aquariids) விண்கல் மழை பொழியும் அற்புதமான காட்சியை இன்று இரவு காணலாம் என வானியல் மற்றும் பொறியியல் பேராசிரியர கிஹான் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பேராசிரியர கிஹான் வீரசேகர, பூமியிலிருந்து இந்த ஆண்டு காணக்கூடிய முக்கிய வானியல் நிகழ்வுகளில் ஒன்றான விண்கல் மழை, கும்ப ராசிக்குள் கிழக்கு வானத்தில் சிறப்பாகக் காணப்படும்.

இரவு 9 மணி முதல் அதிகாலை வரை விண்கற்களைக் காண முடியும் என்றாலும், அவற்றைப் பார்ப்பதற்கு ஏற்ற நேரம் நள்ளிரவு ஆகும். தெளிவான வானத்தின் கீழ் ஒரு மணி நேரத்திற்குள் 15 முதல் 20 விண்கற்களை பார்வையாளர்கள் காணலாம்.

இந்த நிகழ்வு குறிப்பாக சிறுவர்களுக்கு விண்வெளியில் ஒரு இயற்கை நிகழ்வைக் காணவும், வானியலில் அதிக ஆர்வத்தை வளர்க்கவும் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாக அமையும்.

இந்த காட்சியுடன், சனி கிரகமும் வானத்தின் அதே பகுதியில் தெரியும் என தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்