அமெரிக்காவில் அதிர்ச்சி – மருந்துகளுக்கு காத்திருந்த பெண்ணுக்கு பொதியில் வந்த மனிதக் கைகள்
அமெரிக்காவில் இணையம் ஊடாக மருந்துகளை கொள்வனவு செய்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதன்படி, கென்டக்கி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மருந்துகளுக்கு பதிலாக, மனிதக் கைகளைக் கொண்ட பொதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தனது வீட்டுக்கு விநியோகம் செய்த பொதியைத் திறந்து பார்த்த போது, உள்ளே பனிக்கட்டிகள் நிரப்பப்பட்ட நிலையில் மனிதக் கைகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த விசாரணை அதிகாரிகள், பொதியில் வந்த உடற்பாகங்களைக் மீட்டனர்.
இதனிடையே, நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மனிதப் பாகங்கள் உடலுறுப்பு மாற்று சிகிச்சைக்காக அனுப்பப்படவிருந்தவை எனத் தெரியவந்துள்ளது.
இந்தப் பாகங்கள் நாஷ்வில்லே (Nashville) என்ற இடத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்ல அனுப்ப வேண்டிய பொதி எனத் தெரியவந்துள்ளது.
ஆனால், விநியோகம் செய்யும் போது ஏற்பட்ட தவறு காரணமாகவே அந்தப் பெண்ணின் வீட்டிற்கு விநியோகம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





