ஐரோப்பா

உக்ரைனின் பிரைலுகி நகர் மீது தாக்குதல் நடத்திய ரஸ்யா – ஐவர் பலி!

உக்ரைனின் வடக்குப் பகுதியில் உள்ள பிரைலுகி நகர் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் ஒரு வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்ததாக வியாசெஸ்லாவ் சாஸ் கவர்னர் தெரிவித்துள்ளார். 5 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.

6 டிரோன்கள் பிரைலுகி பகுதியில் இன்று அதிகாலை தாக்கியது. இதில் பல குடியிறுப்பு கட்டிடங்கள் சேதமடைந்தன.

இந்த தாக்குதல் நடத்தப்பட்ட சிறிது நேரத்தில் கிழக்கு உக்ரைன் நகரான கார்கீவிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் கர்ப்பிணி பெண், குழந்தைகள் உள்பட 17 பேர் காயம் அடைந்துள்ளனர். இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை டிரோன் தாக்கியது. இதில் பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகின.

சில தினங்களுக்கு முன் உக்ரைன் ரஷியாவின் விமானத் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் பல விமானங்கள் சேதடைந்தன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்