இலங்கை செய்தி

உரிமம் பெறாமல் தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம்

முறையான உரிமம் பெறாமல் தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் (இணக்கம்) மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை சட்டத்தின் ஊடாக 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பருவத்தில் தொலைபேசி விற்பனை நிலையங்கள் பதிவு செய்யப்படாமை அதிகரித்துள்ளமையினால், தொலைபேசி விற்பனையை ஒழுங்குபடுத்துவதில் ஆணைக்குழுவுக்கு சிரமம் ஏற்பட்டதன் காரணமாகவே இந்த அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

அதன்படி, இனிமேல் உரிமம் பெறாத கடைகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும், பதிவு பெறும் கடைகள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் இயக்குநர் மேலும் தெரிவித்தார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை