இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

15ம் திகதி நாட்டு மக்களுக்கு பிரியாவிடை உரை ஆற்றும் ஜோ பைடன்

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். டிரம்ப் அதிபராக வருகிற 20ந்தேதி பதவி ஏற்கிறார்.

இந்த நிலையில் தற்போது அதிபராக உள்ள ஜோ பைடன் 20ந்தேதி நண்பகல் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுகிறார். அதற்கு முன்பாக வருகிற 15ந்தேதி ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு பிரிவுபசார உரையாற்றுகிறார்.

அப்போது தனது ஆட்சி நிர்வாகத்தில் மேற்கொண்டு நடவடிக்கைகள் குறித்து உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 13ந்தேதி வெளியுறவுத்துறை சார்பில் உரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஜோ பைடன் தான் பதவியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு தனது மகன் உள்பட பலருக்கு பொது மன்னிப்பு வழங்கி இருந்தார். இதற்கிடையே மேலும் பலருக்கு பொது மன்னிப்பு வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி