செய்தி விளையாட்டு

IPL Match 47 – ராஜஸ்தான் அணிக்கு 210 ஓட்டங்கள் இலக்கு

ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

தொடர்ந்து குஜராத்தின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் இருவரும் களம் இறங்கினர். இருவரும் நிதானமாகவும், அதே வேளையில் மோசமான பந்துகளை பவுண்டரிகள் அடித்து ரன்கள் குவித்தனர்.

இதில் கேப்டன் சுப்மன் அரைசதம் அடித்து அசத்தினார். மறுபுறம் தடுமாறி வந்த சாய் சுதர்சன் 30 பந்தில் 39 ரன் எடுத்த நிலையில் தீக்சனா பந்துவீச்சில் ரியான் பராக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இறுதியில் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்கள் அடித்தார்.

ராஜஸ்தான் தரப்பில் மகேஷ் தீக்சனா 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 210 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ஆட உள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி