இலங்கை செய்தி

இலங்கை – எதிர்கட்சி பொறுப்பை ஏற்குமாறு ரணிலிடம் கோரிக்கை!

  • September 24, 2025
  • 0 Comments

தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சியின் பொறுப்பை ஏற்று எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளிடமிருந்து முன்னாள் ஜனாதிபதிக்கு சமீபத்தில் அழைப்புகள் விடுக்கப்பட்டதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதன்படி, முன்னாள் ஜனாதிபதி இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியுள்ளார், மேலும் ஆயிரம் அரசியல் கூட்டங்களை நடத்தும் திட்டம் குறித்து முன்னாள் ஜனாதிபதி தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவரது உடல்நிலை மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் காரணமாக அவர் வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக […]

பொழுதுபோக்கு

இது நடந்தால் மட்டுமே “96 – 2” உருவாகும்

  • September 24, 2025
  • 0 Comments

விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கி அதிலும் வெற்றி பெற்றார். அடுத்ததாக, நடிகர் விக்ரமை வைத்து படம் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், கொஞ்சம் தாமதமாகவுள்ளது. இதற்கிடையே, 96 திரைப்படத்தின் ரசிகர்கள் ராமும் ஜானுவும் என்ன ஆனார்கள் என பிரேம் குமாரிடம் கேட்பதுடன் 96 – 2 படத்திற்காகவும் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், நேர்காணலில் […]

ஐரோப்பா

இத்தாலியில் கரைபுரண்டோடும் வெள்ளம் – ஜெர்மனிய பிரஜை மாயம்!

  • September 24, 2025
  • 0 Comments

இத்தாலியின் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வாகனம் ஒன்றில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், வெள்ளத்தை சமாளிக்க வீட்டின் கூரையின் மேல் ஏறிய சிலரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீட்பு பணிகளுக்காக 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்,  சம்பவ இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன்  லோம்பார்டி முழுவதும் 650க்கும் மேற்பட்ட அவசரகால சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும்,  தெரிவிக்கப்படுகிறது. செவெசோ மற்றும் […]

ஐரோப்பா

ஒஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து 3 சிறார்களைக் கைது செய்த நோர்வே பொலிஸார்

  • September 24, 2025
  • 0 Comments

நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சந்தேகப்படும்படியான மூவரை பொலிஸார் கைது செய்துள்னளர். பார்க்வீன் மற்றும் பைல்ஸ்ட்ரெட் பகுதியில் இந்த இரண்டு குண்டுவீச்சு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் வசிப்போர் அச்சமும், பீதியும் அடைந்தனர். நோர்வே பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அந்த பகுதியைச் சுற்றி வளைத்த அவர்கள், தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு வெடிக்காமல் இருந்த கையெறி குண்டு ஒன்றை கண்டுபிடித்து, செயலிழக்கச் செய்தனர். அங்கு சுற்றித்திரிந்த […]

அறிவியல் & தொழில்நுட்பம்

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சந்திரனுக்கு அனுப்பப்படும் குழுவினர்!

  • September 24, 2025
  • 0 Comments

50 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 2026 தொடக்கத்தில் சந்திரனைச் சுற்றி பத்து நாள் பயணத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. உலகின் முதல் சந்திர பயணத்திற்கு 50 ஆண்டுகள் ஆகிவிட்டதால், மீண்டும் அமைப்புகளைச் சோதிக்க நாசா நான்கு விண்வெளி வீரர்களை அனுப்புகிறது. மனித விண்வெளி ஆய்வில் இது ஒரு முக்கியமான தருணமாக இருக்கும் என்று நாசாவின் செயல் துணை உதவி நிர்வாகி லேகிஷா ஹாக்கின்ஸ் கூறினார். ஆர்ட்டெமிஸ் II என்று அழைக்கப்படும் இந்த பயணத்தில் […]

ஆசியா

தைவானை தாக்கிய ரகாசா புயல்: ஏரி உடைப்பில் சிக்கி 14 பேர் பலி,124 பேர் மாயம்

  • September 24, 2025
  • 0 Comments

தைவானை தாக்கிய அதி தீவிரப் புயல் மற்றும் கனமழையால் பழமையான ஏரியில் உடைப்பு ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்தனர், 124 பேர் காணாமல் போயுள்ளனர். ரகாசா தீவிரப் புயல் பலத்த மழையுடன் தைவானை தாக்கிய நிலையில், நேற்று கிழக்கு ஹுவாலியன் கவுண்டியில் உள்ள ஒரு பழமையான ஏரி உடைந்து, ஒரு பாலத்தை அடித்துச் சென்றது. இதனால் அடர்த்தியான சேறு மற்றும் சகதியுடனான தண்ணீர் நகரத்துக்குள் புகுந்தது. இதனால் அந்த நகரத்தில் உள்ள வீடுகளின் முதல் தளம் வரை […]

இலங்கை

பணவியல் கொள்கை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்!

  • September 24, 2025
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கி இரவு நேர கொள்கை விகிதத்தை (OPR) 7.75% இல் பராமரிக்க முடிவு செய்துள்ளது. நாணயக் கொள்கை சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிலைமைகளை வாரியம் மதிப்பிட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்பகடுகிறது. அத்துடன் தற்போதைய கொள்கை நிலைப்பாடு பணவீக்கத்தை 5% இலக்கை நோக்கி நகர்த்துவதில் இது ஒத்துப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

பொழுதுபோக்கு

ஜெயிலர் 2வில் இருக்கும் 5 சூப்பர் ஸ்டார்கள்

  • September 24, 2025
  • 0 Comments

இந்திய சினிமாவில் ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கு எப்போதுமே அசாதாரண எதிர்பார்ப்பு இருக்கும். குறிப்பாக ஜெயிலர் (2023) படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஜெயிலர் 2 குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பாலிவுட் நட்சத்திரம் ஜாக்கி ஷெராஃப் என பன்முக நட்சத்திரங்கள் நடித்தனர். இந்த நிலையில் ஜெய்லர் 2வில் இருக்கும் மேலும் சில சூப்பர் ஸ்டார்கள் பற்றி பார்ப்போம். மோகன்லால்: மலையாள சினிமாவின் பெருமை சிவராஜ்குமார்: […]

வட அமெரிக்கா

ரஷ்யா ஒரு ‘காகிதப் புலி’,உக்ரைன் இழந்த அனைத்து பிரதேசங்களையும் மீண்டும் கைப்பற்ற முடியும் ; டிரம்ப்

  • September 24, 2025
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வின் போது உரையாற்றிய அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவோடு போரில் இழந்த பகுதிகள் முழுவதையும் உக்ரேன் மீட்டெடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் ஆகாயவெளியின் எல்லைகளை மீறும் ரஷ்யாவின் விமானங்களைச் சுட்டு வீழ்த்துமாறும் அவர் கருத்துத் தெரிவித்தார். பதற்றம் சூழ்ந்த நிலையில் ரஷ்ய அதிபர் புட்டின் பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்ற நம்பத்தகுந்த பங்காளிதானா என்பதில் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் இருப்பதையும் […]

இலங்கை

இலங்கையில் தீவிரமடையும் மின்சார சபை ஊழியர்களின் போராட்டம்

  • September 24, 2025
  • 0 Comments

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் திட்டமிட்டப்படி இன்று (24) நள்ளிரவு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் மின்சார தொழில்நுட்ப வல்லுநர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் கோசல அபேசிங்க இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் அனைத்து தொழிற்சங்கங்களும் கூடி ஆராய்ந்ததன் பின்னர் இன்று பிற்பகல் இறுதி முடிவை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

error: Content is protected !!