உலகம் செய்தி

உலகின் பழமையான டைனோசர்களில் ஒன்றின் எலும்புகள் அர்ஜென்டினாவில் கண்டுபிடிப்பு

  • October 16, 2025
  • 0 Comments

உலகின் பழமையான டைனோசர் இனங்களில் ஒன்றின் புதைபடிவ எலும்புகளை அர்ஜென்டினா விஞ்ஞானிகள் ஆண்டிஸ் (Andes) மலைகளில் கண்டுபிடித்துள்ளதாக CONICET ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அர்ஜென்டினாவின் வடமேற்கில் 9,842 அடி உயரத்தில், ஹுவாய்ராக்சர் ஜாகுயென்சிஸ் (Huayracursor Jaguensis) என்ற சிறிய டைனோசரின் கிட்டத்தட்ட முழுமையான எலும்புக்கூட்டை CONICET நிறுவனம் தலைமையிலான பழங்காலவியல் குழு கண்டுபிடித்துள்ளது. டைனோசரின் மண்டை ஓட்டின் ஒரு பகுதியையும், வால் வரை நீண்டு செல்லும் முழுமையான முதுகெலும்பு நெடுவரிசையையும், கிட்டத்தட்ட அப்படியே இருக்கும் முன்கைகள் மற்றும் […]

இந்தியா செய்தி

கடலூரில் மின்னல் தாக்கி நான்கு பெண்கள் மரணம்

  • October 16, 2025
  • 0 Comments

தமிழ்நாட்டின் கடலூர் (Cuddalore) மாவட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் (Veppur) அருகே உள்ள கழுதூர் (Kaludoor) கிராமத்தில் மக்காச்சோள பண்ணையில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மின்னல் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். அரியநாச்சி (Ariyanachi) கிராமத்தைச் சேர்ந்த கவிதா, பாரிஜாதம், சின்னப் பொன்னு மற்றும் ஆதிலட்சுமி ஆகிய நான்கு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மின்னல் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து […]

உலகம் செய்தி

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை விடுத்த வங்கதேச வழக்கறிஞர்

  • October 16, 2025
  • 0 Comments

வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைமை வழக்கறிஞர், பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு (Sheikh Hasina) மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். “அனைத்து குற்றங்களுக்கும் மூளையாக ஷேக் ஹசீனா இருந்துள்ளார். அவர் ஒரு இதயமற்ற குற்றவாளி. அவர் அதிகபட்ச தண்டனைக்கு தகுதியானவர். மரண தண்டனை தொடர்பாக அவருக்கு எந்த கருணையும் காட்டப்படக்கூடாது” என்று தலைமை வழக்கறிஞர் முகமது தாஜுல் இஸ்லாம் (Mohammad Tajul Islam) குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்காலத்தில் யாரும் […]

செய்தி விளையாட்டு

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் ஆலோசகராக களமிறங்கும் நியூசிலாந்து வீரர்

  • October 16, 2025
  • 0 Comments

19வது ஐபிஎல் (IPL) தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது . இந்த தொடருக்கான ஏலம் டிசம்பர் மாதம் 13ம் திகதியில் இருந்து 15ம் திகதிக்குள் நடைபெற உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், 2026ம் ஆண்டிற்கான IPL தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (Lucknow Super Giants) அணியின் ஆலோசகராக நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் (Kane Williamson) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் லக்னோ அணி பிளே ஆப் (Play-Off) சுற்றுக்கு […]

இலங்கை

இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக கடன் பெறும் இலங்கையர்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

  • October 16, 2025
  • 0 Comments

இணையத்தளம் மற்றும் தொலைபேசிகள் ஊடாக கடன் பெறுவது தொடர்பாக காவல்துறையினர் மக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இணையத்தளங்கள் அல்லது தொலைபேசிகள் ஊடாக விளம்பரப்படுத்தி அல்லது நேரடி தொலைபேசி அழைப்புகள் மூலம் எவ்வித சாட்சிகளுமின்றி உடனடியாக பணத்தைப் பெற்றுக்கொள்ளும் முறையைக் காண்பித்து கடன் வழங்க முன்வரும் நிறுவனங்கள் தொடர்பாக அவதானித்து வருவதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. இத்தகைய கடன்களை மக்கள் பெற்றுக்கொள்ளும் போது பெறப்படும் வட்டி வீதம் மற்றும் கடனை மீண்டும் செலுத்த வேண்டிய காலங்கள் தொடர்பாக […]

இந்தியா

எரிபொருள் கொள்வனவு தொடர்பில் ட்ரம்புடன் பேசினாரா மோடி?

  • October 16, 2025
  • 0 Comments

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் வாங்குவதை நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்று இந்திய பிரதமர் தனக்கு உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே நேற்று (15) தொலைபேசி உரையாடல் எதுவும் நடைபெறவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடிக்கும் அதிபர் டிரம்புக்கும் இடையே நேற்று உரையாடல் அல்லது தொலைபேசி அழைப்பு நடந்ததா என்பது […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் விலைக்கு வரும் கோயில் கட்டிடம் – வேதனையில் பக்தர்கள்

  • October 16, 2025
  • 0 Comments

தங்கள் கோயில் இடத்தை கவுன்சில் அதன் பட்ஜெட்டை சமநிலைப்படுத்த விற்கவுள்ள செய்தியை அடுத்து ஏமாற்றமடைந்துள்ளதாக இந்து சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். பீட்டர்பரோவில்(Peterborough ) உள்ள நியூ இங்கிலாந்து வளாகத்தில் பாரத் இந்து சமாஜ்(Bharat Hindu Samaj) கோயிலானது 1986ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த வளாகம் பீட்டர்பரோ நகர சபைக்குச் சொந்தமானது, இந்த கோயில் கட்டிடம் அதன் சொத்துக்களை விற்பதன் மூலம் கடன்களைக் குறைப்பதற்கான அதிகாரசபையின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். கோயிலின் தலைவர் கிஷோர் லட்வா […]

இலங்கை

இலங்கையில் இருந்து இஷாரா செவ்வந்தி தப்பிச் சென்றது எப்படி? காவல்துறையிடம் வழங்கிய வாக்குமூலம்!

  • October 16, 2025
  • 0 Comments

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி, கணேமுல்ல சஞ்சீவ  கொலைக்குப் பிறகு எப்படி தப்பிச் சென்றார் என்பது குறித்து பாதுகாப்புப் படையினரிடம் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். கொலைக்குப் பிறகு இரண்டு மாதங்களுக்கும் மேலாக மதுகம மற்றும் தங்காலை ஆகிய  பகுதிகளில் பதுங்கியிருந்ததாக அவர் கூறியுள்ளார். உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் கிஹான் சில்வா என்ற காவல்துறை அதிகாரி அக்டோபர் 10 ஆம் திகதி இஷாரா செவ்வந்தியை கைது செய்வதற்காக நேபாளம் […]

ஐரோப்பா செய்தி

ஜோன்சன் &ஜோன்சன் (Johnson & Johnson) நிறுவனம் மீது இங்கிலாந்தில் வழக்கு தாக்கல்!

  • October 16, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில்  ஜோன்சன் &ஜோன்சன் ( Johnson & Johnson) நிறுவனம் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்பெஸ்டாஸ் (asbestos) கலக்கப்பட்ட குழந்தைகளுக்கான பவுடரை (baby powder) தெரிந்தே விநியோகம் செய்தமைக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. KP Lawவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கில் புற்றுநோயை ஏற்படுத்தும் தாதுக்களின் கலவையான ஆஸ்பெஸ்டாஸ் (asbestos)   சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாதுக்கள் புற்றுநோய்களுடன் நேரடியாக தொடர்புடையவை என்பதை அறிந்திருந்தாலும் குறித்த நிறுவனமானது எந்தவொரு எச்சரிக்கையையும் வெளியிடாமல் அதனை விநியோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

போர் சூழல் – உணவுக் கிடங்குகளை நிரப்பும் ஸ்வீடன் (Sweden)!

  • October 16, 2025
  • 0 Comments

ஸ்வீடன் (Sweden) தனது பனிப்போர் கால உணவுக் கிடங்குகளை மீளவும் நிரப்பும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்யாவுடனான போர் மூளும் அபாயம் அதிகரித்து வருகின்ற நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு சுவீடன் நேட்டோ இராணுவ கூட்டணியில் இணைந்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு திட்டங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக 2026 வரவு செலவு திட்டத்தின் கீழ், தேசிய தானிய இருப்புக்களை உருவாக்க […]

error: Content is protected !!