யானையால் பறிபோன இரு உயிர்கள்
கோவை வனச்சரகம் தடாகம் பிரிவிற்குட்பட்ட மாங்கரை பகுதியில் அதிகாலை சுமார் 3 மணி அளவில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்துள்ளது. இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனிடையே யானையை விரட்ட முயன்ற போது மகேஷ் குமார்(36) என்பவரை எதிர்பாராத விதமாக யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் யானை அவரது உடலின் அருகிலேயே சுற்றி திரிந்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை […]













