இங்கிலாந்தில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக களத்தில் இறங்கிய ரிஷி சுனக் : 105 பேர் கைது!
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சட்டவிரோத குடியேறிகள் குறித்து மேற்கொண்ட சோதனையில் 105 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். ரிஷி சுனக் இந்த வார தொடக்கத்தில், உள்துறை அலுவலக அமலாக்க அதிகாரிகளுடன் இணைந்து சட்டவிரோத குடியேறிகள் தொடர்பான சோதனையை மேற்கொண்டார். இந்த நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக இங்கிலாந்தில் தங்கியிருந்த சுமார் 20 நாடுகளைச் சேர்ந்த 105 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் ரிஷி சுனக் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தனது அரசாங்கத்தின் முதன்மையான வாக்குறுதியான […]













