அந்தரத்தில் சிக்கிய துப்புரவு பணியாளர்கள்; போராடி மீட்ட தீயணைப்பு படையினர்!(வீடியோ)
கனடா நாட்டின் வான்கூவரிலுள்ள கட்டிடத்தின் வெளிப்புற கண்ணாடிகளைத் துடைத்துக் கொண்டிருந்த போது, அந்தரத்தில் சிக்கிய ஊழியர்களைப் போராடி மீட்ட தீயணைப்பு படை வீரர்களைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். கனடா நாட்டின் வான்கூவர் நகரின் ஜார்ஜியா மற்றும் ஹோமர் தெருவிலுள்ள புதிய கட்டிடத்தின் வெளிப்புற கண்ணாடிச் சுவர்களை இரண்டு தொழிலாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்திருக்கின்றனர்.அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் மேலே சென்ற லிப்ட் சரியாக வேலை செய்யாமல் அந்தரத்தில் நின்றிருக்கிறது.இதனால் ஊழியர்கள் இருவரும் உயரமான கட்டிடத்தின் அந்தரத்தில் சிக்கியிருக்கின்றனர். […]













