இலங்கை

நாமலை ஊக்குவிப்பது நோக்கமல்ல – ஹரின் பெர்னாண்டோ!

  • November 22, 2025
  • 0 Comments

நுகேகொடையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி பேரணி நாமல் ராஜபக்சவை  ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) துணைப் பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கூட்டு எதிர்க்கட்சிப் படைக்கு ஆதரவைப் பெறுவதே இதன் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.  

ஐரோப்பா

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு – லண்டனில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள ஈழத்தமிழர்!

  • November 22, 2025
  • 0 Comments

பிரான்ஸில் குழந்தை ஒன்றை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுஜந்த் கேதீஸ்வரராசா என்ற 30 வயதுடைய ஈழத்தமிழர் ஒருவர் மேற்படி  குற்றச்சாட்டின் கீழ்  லிவர்பூல் (Liverpool) நகர மையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு அதிகாரிகள் பாலியல் குற்றச்சாட்டின் கீழ் அவரை தேடி வருவதாக அறிவித்திருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அவர் லண்டனில் உள்ள நீதிமன்றத்தில்    முன்னலைப்படுத்தப்பட்டுள்ளார். அப்போது நாடு கடத்தல் செயன்முறை […]

பொழுதுபோக்கு

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா? புதிய அப்டேட்

  • November 22, 2025
  • 0 Comments

ரஜினிகாந்தின் 173ஆவது திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, சுந்தர்.சி இயக்க இருப்பதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென இந்த படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர்.சி அறிவித்தார். சுந்தர்.சி விலகலை அடுத்து ரஜினி – கமல் கூட்டணியில் உருவாகும் படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதில், கே.எஸ்.ரவிக்குமார் இந்தப் படத்தை இயக்குவதில் முன்னணியில் இருக்கிறார் எனச் சொல்லப்பட்டது. இதற்கிடையே, ரஜினியை வைத்து ‘பேட்ட’ படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் பெயரும் பேசப்பட்டது. […]

ஐரோப்பா

பிரான்ஸ் தனது குழந்தைகளை இழக்க தயாராக இருக்க வேண்டும் – ஜெனரலின் கருத்தால் சர்ச்சை!

  • November 22, 2025
  • 0 Comments

ரஷ்யாவுடன் ஏற்படக்கூடிய சாத்தியமான போரில் குழந்தைகளை இழக்க தயாராக இருக்க வேண்டும் என பிரான்ஸின் இராணுவ தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2030 ஆம் ஆண்டில் ரஷ்யா , நேட்டோவுடனான போருக்கு தயாராகி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ் தன்னாட்டு குடிமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இராணுவ அதிகாரி ஒருவர், நாம் யார் என்பதை அறிந்துகொள்ள துன்பத்தை எதிர்கொள்ளும் மன உறுதி வேண்டும் எனக் […]

இலங்கை

கண்டி – கடுகண்ணாவ நிலச்சரிவு – மேலும் ஒருவர் பலி!

  • November 22, 2025
  • 0 Comments

கண்டி – கடுகண்ணாவையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) இன்று தெரிவித்துள்ளது. கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் அமைந்திருந்த சில வர்த்தக நிலையங்கள்மீது மண்மேடு சரிந்து விழுந்தது. இடிபாடுகடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய இன்று காலை முதலே மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. மீட்பு பணியின்போது மேலும் ஒருவரின்  உடலை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பலியானோரின்  எண்ணிக்கை […]

இலங்கை

கரையோரப் பாதையில் ரயில் சேவையை மட்டுப்படுத்த நடவடிக்கை!

  • November 22, 2025
  • 0 Comments

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிய பயணித்த ரயில் ஒன்று இன்று மதியம் தடம் புரண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கம்புருகமுவ மற்றும் வெலிகம ரயில் நிலையங்களுக்கு இடையில் குறித்த ரயில் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால்   கடலோர ரயில் பாதையில் ரயில் சேவைகள் வெலிகம வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும்,   பழுதுபார்ப்பு முடிந்து பாதை பாதுகாப்பானதாக அறிவிக்கப்படும் வரை கடற்கரை பாதையில் ரயில் போக்குவரத்து கொழும்புக்கும் –  வெலிகமவிற்கும் இடையில் மட்டுமே இயங்கும் என்று […]

ஐரோப்பா

ஸ்கொட்லாந்தில் புலம்பெயர்ந்தோருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வகுப்பிற்கு எதிர்ப்பு!

  • November 22, 2025
  • 0 Comments

ஸ்கொட்லாந்தின் (Scotland) கிளாஸ்கோவில் (Glasgow) உள்ள ஸ்பார்டன் குழந்தைகள் பாதுகாப்புக் குழு புலம் பெயர்ந்தோருக்கு ஆங்கில கல்வியை வழங்கும் பிரத்தியேக வகுப்பை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. குறித்த வகுப்பானது வரும் திங்கட்கிழமை டால்மார்நாக் (Dalmarnock) ஆரம்பப் பாடசாலையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும், வீட்டிலேயே வைத்திருக்குமாறும் வலியுறுத்தியுள்ளது. அலெக்ஸ் கெய்ர்னி (Alex Cairnie) என்பவர் தலைமை தாங்கும் இந்த நிகழ்வு, தாய்மொழி பேசாத மாணவர்களின் குடும்பங்களுக்கு ஆங்கிலப் பாடங்களை வழங்குவதை நோக்கமாகக் […]

உலகம் செய்தி

ஜெருசலேமின் புறநகர்ப் பகுதியில் துப்பாக்கிச்சூடு – இரு பாலஸ்தீனியர்கள் பலி!

  • November 22, 2025
  • 0 Comments

இஸ்ரேலியப் படைகள் ஜெருசலேமின் புறநகர்ப் பகுதியில் இரண்டு பாலஸ்தீன இளைஞர்களைச் சுட்டுக் கொன்றதாக பாலஸ்தீன ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதை இஸ்ரேலிய காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.  அச்சுறுத்தலை ஏற்படுத்திய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச்சூட்டில் அம்ர் கலீத் அகமது அல்-மர்பூ (Ahmed Al-Marbou  – 18) என்ற இளைஞனும், சமி இப்ராஹிம் சமி மஷாயேக் (Sami Ibrahim Sami Mashayekh – 16)  என்ற சிறுவனும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குஃப்ர் அகாப் […]

உலகம்

வட கரோலினாவில் துப்பாக்கிச்சூடு – நால்வர் படுகாயம்! உதவி கோரும் காவல்துறை!!

  • November 22, 2025
  • 0 Comments

வட கரோலினாவின் (North Carolina) கான்கார் (Concord) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நான்கு பேர்  பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கான்கார்டில் கிறிஸ்துமஸ் மர விளக்கு ஏற்றும் நிகழ்வு நேற்று இடம்பெற்ற நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதல்தாரிகள் தப்பியோடியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணி முழுவீச்சில் இடம்பெற்று வருவதாகவும்  தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் 704-920-5027 என்ற எண்ணிற்கு தகவல் வழங்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.  

பொழுதுபோக்கு

ராஜ்கமல் தயாரிப்பில் நடிக்க வாய்ப்பு!! மக்களுக்கு எச்சரிக்கை

  • November 22, 2025
  • 0 Comments

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம் […]

error: Content is protected !!