ONMAX DT திட்டத்தின் மூலம் பணமோசடி : 95 வங்கி கணக்குகள் முடக்கம்!
ONMAX DT பிரமிட் திட்டத்தைச் சேர்ந்த 95 வங்கிக் கணக்குகளை முடக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக அடையாளம் காணப்பட்ட ஆறு நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கி கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வங்கிக்கணக்குகளில் 790 மில்லியன் தொகை காணப்பட்டதாகவும், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான 95 கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் (CBSL) நிதிப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாட்டின் […]













