துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலியான சூடானின் மிகப்பெரிய பாடகி
சூடானின் மிகப்பெரிய பாடகர்களில் ஒருவரான ஷேதன் கார்டூட்(37) துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சூடான் ராணுவத்திற்கு துணை ராணுவப்பிரிவுக்கும் இடையேயான மோதலில் பாடகி கார்டூட் கொல்லப்பட்டுள்ளார் என்றே கூறுகின்றனர். சூடானில் இரு பிரிவினருக்குமான மோதலில் சிக்கிக்கொண்டுள்ள பொதுமக்களின் துன்பத்தைப் போக்க ஒப்பந்தம் கையெழுத்தான அடுத்த நாளே பாடகி துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார். அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் ஏப்ரல் மாதம் தொடங்கி சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவப் பிரிவுக்கும் கடுமையான சண்டை நடந்து வருகிறது. […]













