ஆசியா

சிங்கப்பூரில் நட்சத்திர விடுதியில் போதை விருந்து – 49 பேர் கைது!

  • August 13, 2023
  • 0 Comments

சிங்கப்பூரின் சுற்றுலா தலங்களின் ஒன்றான சென்டோசா தீவில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக அதிகாரிகளுக்கு துப்பு கிடைத்தது. அதன்பேரில் அங்குள்ள ஒரு நட்சத்திர விடுதியில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது போதை பவுடர் பயன்படுத்திய 49 பேரை கைது செய்தனர். பின்னர் சிஎன்பி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். கைப்பற்றப்பட்ட பொருட்களில் எக்ஸ்டசி, கெட்டமைன் மற்றும் போதைப்பொருள் சாதனங்கள் ஆகியவை இருந்தன. கைது செய்யப்பட்ட 49 பேரும் 21 முதல் 46 […]

ஆசியா

பாகிஸ்தானில் புதிய பிரதமர் நியமனம்!

  • August 13, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் தற்காலிக பிரதமராக ‘அன்வர் உல் ஹக் கக்கர்’ நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராஜா ராய்ஸ் அகமது இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பலுசிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தும் சுயேச்சை எம்.பி.யாக இருந்த அன்வர்-உல்-ஹக்இ அடுத்த தேர்தல் வரை பாகிஸ்தானின் காபந்து அரசாங்கத்தை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த புதன்கிழமை கலைக்கப்பட்டது. மேலும் 90 நாட்களுக்குள் அந்நாட்டில் பொதுத் தேர்தல் நடத்தப்பட […]

இலங்கை

இந்த கோடைக் காலப்பகுதியில் விண்கல் மழையை காணமுடியுமாம்!

  • August 13, 2023
  • 0 Comments

இந்த நாட்களில் கண்கவர் விண்கல் மழையை காண முடியும் என வானியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார். குறித்த மழை  ‘P(r)sidious’ விண்கல் மழை என அழைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விண்கற்களை விடியற்காலை 01 மணி முதல் காண முடியும் என சுட்டிக்காட்டியுள்ள அவர், அடிவானத்தில் இருந்து எழும் விண்கற்கள் மெதுவாக வானத்தை நோக்கி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அறிந்திருக்க வேண்டியவை

மனித இதயத்தில் பிளாஸ்டிக் கண்டுப்பிடிப்பு!

  • August 13, 2023
  • 0 Comments

சீனாவில் உள்ள விஞ்ஞானிகள் முதல் முறையாக மனித இதயத்தில் மைரோபிளாஸ்டிக்ஸைக் கண்டறிந்துள்ளனர். அமெரிக்க கெமிக்கல் சொசைட்டி வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வில் இந்த தகவல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள பெய்ஜிங் அன்சென் மருத்துவமனையைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இருதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 15 நோயாளிகளின் இதய திசுக்களை ஆய்வு செய்தபோது இது கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அத்துடன்  “பெரும்பாலான திசு மாதிரிகளில் பல்லாயிரக்கணக்கான தனிப்பட்ட மைக்ரோபிளாஸ்டிக் துண்டுகளைக் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக நியூயார்க் போஸ்ட்  அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் அனைத்து இரத்த மாதிரிகளிலும் பிளாஸ்டிக் […]

இலங்கை

ஐஸூடன் கைதான சந்தேகதபர் – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

  • August 13, 2023
  • 0 Comments

ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்க திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை-மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த சந்தேக நபரை சோதனை இட்ட போது அவரிடமிருந்து 11g ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் -இக்கிரிகொல்லாவ பகுதியில் வசித்து வரும் அக்பர் முஹம்மது ரிபான் (35) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலையிலிருந்து மோட்டார் சைக்கிளில் அனுராதபுரம் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் கடலுக்கு செல்பவர்களுக்கு விசேட எச்சரிக்கை

  • August 13, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் கடலுக்கு செல்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்ப்பட்டுள்ளது. ஜெர்மனிய நாட்டில் கடலுக்கு நீராட சென்றவர்களில் 192 பேர் இதுவரை உயிரிழந்து இருப்பதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனிய நாட்டில்இந்த ஆண்டு இது வரை 192 பேர் கடலில் நீந்துவதற்காக சென்று பலியாகியுள்ளனர். ஜெர்மனியின் டொச்சர் லேபன் ஸ்வெட் ரிசேர்ச் என்று சொல்லப்படுகின்ற அமைப்பானது இதனை தெரிவித்து இருக்கின்றது. அதாவது 25-07-2023 வரை 192 பேர் இவ்வாறு இறந்ததாக தெரியவந்துள்ளது.கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது […]

பொழுதுபோக்கு

மாஸ் காட்டிய ஜெயிலர்… சொந்த மண்ணிலேயே மண்ணை கவ்விய சிரஞ்சீவி…

  • August 13, 2023
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல், தென்னிந்திய ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள். ரஜினிக்கு சில வருடங்களுக்குப் பிறகு அமைந்த சூப்பர் ஹிட் படம் என்றால் அது இந்த படம் தான். படம் ரிலீஸ் ஆகி இரண்டு நாட்களில் தமிழ்நாடு மட்டுமில்லாமல் கர்நாடகா மற்றும் கேரளாவிலும் தன்னுடைய வசூல் சாதனையை நடத்திக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் விஜய் மற்றும் அஜித்தின் வாரிசு, துணிவு படங்களின் […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடொன்றில் அதிர்ச்சி – இன்ஸ்டாகிராம் லைவில் மனைவி – மகனை கொன்ற நபர்

  • August 13, 2023
  • 0 Comments

ஐரோப்பிய நாடான போஸ்னியாவில் இன்ஸ்டாகிராமில் லைவ் போட்டு முன்னாள் மனைவி மற்றும் மகனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடி பில்டர் ஒருவர் தனது முன்னாள் மனைவியை இன்ஸ்டாகிராமில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். அதன் பின்னர், தப்பி ஓடிய தனது மகனையும் மேலும் ஒரு நபரையும் கொலை செய்திருக்கிறார். வடகிழக்கு போஸ்னிய நகரமான Gradacac-ல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும், அங்கு தாக்குதல் நடத்திய பாடி பில்டர், […]

இலங்கை

கனடாவில் இருந்து இலங்கை சென்ற சிறார்களுக்கு நேர்ந்த கதி

  • August 13, 2023
  • 0 Comments

கனடாவில் இருந்து இலங்கை சென்ற சிறார்கள் இருவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய சுற்றுலா வழிக்காட்டி ஒருவரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 16 வயதான சிறுமியும் சிறுவனும் அவர்களது, தந்தையுடன் சுற்றுலாவுக்காக நாட்டுக்கு சில நாட்களுக்கு முன்னர் வருகைத் தந்துள்ளனர். சுற்றுலாவின் போது, கொஸ்கொடையில் இருந்து காலி கோட்டையை பார்வையிடுவதற்காக வேனில் பயணித்த இரண்டு சிறுவர்களையும் சுற்றுலா வழிகாட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் இருந்து, தப்பிச் சென்றுள்ள சந்தேகநபரை […]

ஐரோப்பா

ஐரோப்பா உட்பட உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா – 80 சதவீதம் உயர்வு

  • August 13, 2023
  • 0 Comments

ஐரோப்பா உட்பட உலக நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, தொற்றின் எண்ணிக்கை 80 சதவீதம் உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. அதாவது, ஜூலை மாதம் 10ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வரை உலகளவில் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளது என்றும், இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 80 சதவீதம் அதிகம் என கூறப்படுகிறது. இருப்பினும், இறப்பு எண்ணிக்கை 57 […]

error: Content is protected !!