இலங்கை

அரச நிறுவனங்களில் 3000 ஓட்டுநர்களுக்கு வேலைவாய்ப்பு!

  • December 9, 2025
  • 0 Comments

மத்திய அரசு நிறுவனங்களில் தற்போது 3,000 க்கும் மேற்பட்ட ஓட்டுநர் காலியிடங்கள் இருப்பதாக ஐக்கிய ஓட்டுநர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த பற்றாக்குறை மாநில ஓட்டுநர் சேவையில் ஏராளமான சிக்கல்களை உருவாக்கியுள்ளது என்று தொழிற்சங்கம் விளக்கியுள்ளது. அரசு நிறுவனங்களில் பணியாற்ற 23,400 ஓட்டுநர்கள் தேவைப்பட்டாலும், தற்போது 20,000 க்கும் மேற்பட்டோர் மட்டுமே பணியில் உள்ளனர் என்று தொழிற்சங்கத் தலைவர் யு.ஏ.லக்ஷ்மன் கூறினார். 2016 முதல் மத்திய அரசு நிறுவனங்களில் ஓட்டுநர்கள் முறையாக ஆட்சேர்ப்பு செய்யப்படாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக […]

இலங்கை

டித்வா புயலின் கோரம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

  • December 9, 2025
  • 0 Comments

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (09) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மேலும் 203 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, மண்ணில் புதையுண்டு காணாமல் போனவர்களது உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடரில் இருந்து இரு வேகப்பந்து வீச்சாளர்கள் விலகல்

  • December 9, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது போட்டி நாளை அடிலெய்ட்(Adelaide) மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் இருந்து இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹெசில்வுட்(Hazlewood) காயம் காரணமாக ஆஷஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார். அதே நேரத்தில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்(Mark Wood) காயம் காரணமாக தொடரில் இருந்து […]

இலங்கை

மலையக மக்களின் காணி உரிமை பிரச்சினை தீர்க்கப்படுமா?

  • December 9, 2025
  • 0 Comments

மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தால், வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய வழிமுறை பிறக்கும் என  நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நுவரெலியா  மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில்  நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஜீவன் தொண்டமான் மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் குறிப்பிட்டிருந்தார். இதன்போது  மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தால், வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய வழிமுறை பிறக்கும்” என்ற கோரிக்கையை முன்வைத்தார். […]

இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழ தொடர்கிறது டில்லியின் உதவி: சிறப்பு விமானமும் அனுப்பி வைப்பு!

  • December 9, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக இந்தியா சகல வழிகளிலும் உதவி வருகின்றது. அந்தவகையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப்பணிகளில் ஈடுபடுவதற்காக, இந்திய விமானப்படையின் எம்ஐ-17 உலங்குவானூர்தி, இன்று முற்பகல் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்தது. சாகர் பந்து நடவடிக்கைக்காக முன்னர் பயன்படுத்தப்பட்ட இரண்டு எம்ஐ-17 உலங்குவானூர்திகள் அத்தியாவசிய பராமரிப்புக்காக இந்தியாவுக்குத் திரும்பிய நிலையில், இந்த உலங்குவானூர்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இன்று வந்த உலங்குவானுர்தியில் 14 பேர் கொண்ட இந்திய விமானப்படை குழு வந்துள்ளது. […]

ஐரோப்பா

H3N2 “சூப்பர் ஃப்ளூ (flu) வைரஸ் – முகக் கவசம் அணியுமாறு வலியுறுத்தல்!

  • December 9, 2025
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் தற்போது H3N2 “சூப்பர் ஃப்ளூ (flu) தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் குறித்த காய்சல் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக் கவசம் அணியுமாறு NHS இன் உயர் நிர்வாகி ஒருவர் வலியுறுத்தியுள்ளார். இருமல் அல்லது தும்மல் ஏற்பட்டால், அலுவலகங்கள் மற்றும் பொது போக்குவரத்து உள்ளிட்ட பொது இடங்களில் முகக் கவசங்களை  அணியுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் தங்கள் காய்ச்சல் தடுப்பூசியைப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டில் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவைத் தாக்கும் புயல் – செம்மஞ்சள் எச்சரிக்கை!

  • December 9, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் சீரற்ற காலநிலை நிலவுவதைத் தொடர்ந்து, அம்பர் எச்சரிக்கை உட்படக் கடுமையான வானிலை முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஐரிஷ் வானிலை ஆய்வு மையத்தால் பெயரிடப்பட்டுள்ள ‘பிராம்’ (Bram) புயல், இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) வேகமாக உருவாகி, இங்கிலாந்தின் வடக்குப் பகுதிக்கு மேற்காக நகர்ந்து, பலத்த மழை மற்றும் கடும் காற்றை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயல் ‘பிராம்’ தற்போது வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதுடன், இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) இரவு முழுவதும் பிரித்தானியாவின் வடக்கு […]

அரசியல் இலங்கை செய்தி

தெரிவுக்குழுவின் தலைமைப் பதவி எதிரணிக்கு வேண்டும்!

  • December 9, 2025
  • 0 Comments

தித்வா புயலினால் ஏற்படும் பேரிடர் தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களத்தால் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டதா என்பது பற்றி ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய ஐக்கிய குடியரசு முன்னணி தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மேற்படி குழுவின் தலைமைப் பதவி எதிரணிக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். “ வளிமண்டளவியல் திணைக்களத்துக்கு விஞ்ஞானப்பூர்வமான தகவல்கள் நவம்பர் 24, 25 ஆம் திகதிகளில் கிடைத்திருக்கும் என நம்புகின்றேன். எனவே, தேசிய அனர்த்த நிலையை பிரகடனப்படுத்தி நடவடிக்கை […]

அரசியல் இலங்கை செய்தி

ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சிக்கு இடமில்லை: எதிரணி உத்தரவாதம்!

  • December 9, 2025
  • 0 Comments

அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எவ்வித எவ்வித சூழ்ச்சிகளிலும் ஈடுபடாது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார். “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்நாட்டை ஐந்து வருடங்களுக்கு ஆள வேண்டும். தமது பொறுப்பை நிறைவேற்றாமல் அவர்கள் தப்பிச்செல்ல முடியாது. # நாம் ஆட்சியைக் கவிழ்க்க சூழ்ச்சிசெய்யவில்லை. அதற்கான உத்தரவாதத்தை நாம் வழங்குகின்றோம்.” எனவும் அவர் கூறினார். கடந்த ஒரு வருடமாக நாம் எவ்வித பேரணியையும் நடத்தவில்லை. நாசகார செயலிலும் […]

இலங்கை

மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள் : மாணவர்களுக்கு விஷேட அறிவிப்பு

  • December 9, 2025
  • 0 Comments

அனர்த்த காலநிலையினால் மூடப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் அனைவரும் டிசம்பர் 15 ஆம் திகதி சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் சீருடை விடயத்தில், தளர்வான கொள்கை பின்பற்றப்படும் […]

error: Content is protected !!