உலகம் செய்தி

மொரோக்கோவின் எல்லைக்கு அருகே புலம்பெயர்ந்தோரின் சடலங்கள் மீட்பு!

  • December 15, 2025
  • 0 Comments

மொரோக்கோவின் (Morocco) அல்ஜீரியா (Algeria) எல்லைக்கு அருகே 09 ஆப்பிரிக்க புலம் பெயர்ந்தோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். உறைபனியின் தாக்கத்தால் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குளிர்காலத்தில் ஏற்படும் கடுமையான வெப்பநிலைக்கு பெயர் பெற்ற மொராக்கோவின் தொலைதூர மலைப்பாங்கான பகுதியான ராஸ் அஸ்ஃபோரில் (Ras Asfour) 07 ஆண்கள் மற்றும் 02 பெண்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இறந்த நபர்கள் பற்றிய கேள்விகளுக்கு மொரோக்கோவின் உள்துறை அமைச்சகம் உடனடியாக […]

இலங்கை

மலையக சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதிக்கு அழைப்பு!

  • December 15, 2025
  • 0 Comments

மலையக சமூகம் எதிர்கொள்ளும் பேரிடர் குறித்து விவாதிக்க ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அழைப்பு விடுத்து தமிழ் முற்போக்குக் கூட்டணியின் (TPA) தலைவர்  மனோ கணேசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில், “உங்களுக்குத் தெரியும், மலையக மக்கள், குறிப்பாக கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தளை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், சமீபத்திய டித்வா பேரழிவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நில உரிமை, வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் ஒப்பீட்டளவில் குறைவாகவும், சில […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பாலஸ்தீனத்தை அங்கீகரித்ததன் விளைவே இது: ஆஸ்திரேலியாமீது இஸ்ரேல் கடும் விமர்சனம்!

  • December 15, 2025
  • 0 Comments

யூத எதிர்ப்பு தாக்குதலை ஊக்குவிக்கும் வகையில் ஆஸ்திரேலியா அரசாங்கம் செயல்பட்டுள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றஞ்சாட்டியுள்ளார். பாலஸ்தீன அரசை அங்கீகரித்ததன்மூலம் ஆஸ்திரேலிய தலைமைத்துவம் இதனை செய்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸை பலவீனமான தலைமைத்துவம் எனவும் அவர் விமர்சித்துள்ளார். யூத எதிர்ப்பு புற்றுநோய் போன்றது. தலைவர்கள் அமைதியாக இருக்கும்பட்சத்தில் அது வேகமாக பரவுகின்றது. புற்றுநோய் பரவ ஆஸ்திரேலிய தலைமைத்துவம் இடமளித்தது. அதனால்தான் யூதர்கள்மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவை உலுக்கிய சம்பவம்: 15 பேர் பலி: துப்பாக்கிதாரிகள் அடையாளம்!

  • December 15, 2025
  • 0 Comments

சிட்னியில் யூத சமூகத்தை இலக்கு வைத்து 50 வயதான சஜிட் அக்ரம் மற்றும் 24 வயதான நவீட் அக்ரம் ஆகியோரே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் தந்தை மற்றும் மகன் என தெரியவந்துள்ளது. 50 வயதான நபர் உரிமம் பெற்ற ஆறு துப்பாக்கிகளை வைத்திருந்தார் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. சிட்னி போண்டி கடற்கரையில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 10 வயது சிறுமி உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். 42 பேர் வைத்தியசாலையில் […]

இலங்கை செய்தி

“கடற்படைக்குப் பாராட்டு” – திருகோணமலையில் ஜனாதிபதி உரை

  • December 14, 2025
  • 0 Comments

மரியாதைக்குரிய, ஒழுக்கமான மற்றும் துணிச்சலான படையான கடற்படையில் இணைந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். திருகோணமலையில் (13) சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 40 ஆவது ஆட்சேர்ப்பில் உள்வாங்கப்பட்ட இடைநிலை அதிகாரிகள், 65 ஆவது ஆட்சேர்ப்பில் உள்வாங்கப்பட்ட இடைநிலை அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறிச் செல்லும் விடுகை அணிவகுப்பில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இந்த நாட்டில் மிகவும் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய திட்டமிடல் சட்ட ஆலோசகர் விலகல்: அரசாங்கத்தில் குழப்பம்.

  • December 14, 2025
  • 0 Comments

பிரிட்டனின் உள்கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதித் திட்டங்களுக்காகத் திட்டமிடல் சட்டங்களை மாற்றுவதற்கான நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸின் (Rachel Reeves) முயற்சிக்கு ஆலோசகராக இருந்த சிரேஷ்ட வழக்கறிஞர் கத்ரின் கௌவார்ட் (Catherine Howard), நான்கு மாதங்களுக்குப் பிறகு அரசாங்கத்தை விட்டு வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திட்டமிடல் விதிமுறைகளை ஒதுக்கித் தள்ளி, பெரிய திட்டங்களை உடனடியாகத் தொடங்க அரசாங்கம் மேற்கொண்ட தீவிரமான முயற்சிகளுக்கு எதிராக அவர் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்துக் கருத்து வேறுபாடுகள் நிலவும் சூழலில் இவரின் […]

இலங்கை செய்தி

கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கான உபகரணங்கள் கையளிப்பு!

  • December 14, 2025
  • 0 Comments

பாதுகாப்பு அமைச்சினால் பெறப்பட்ட ஒரு தொகை உதவிப் பெருட்கள் ( 13) கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது. அவசர சிகிச்சைக்குரிய (ICU) படுக்கைகள், சக்கர நாற்காலிகள் மற்றும் குழந்தை தொட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் இவற்றில் அடங்கும். இது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை, நோயாளிகளின் நடமாட்டம் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகளை மேட்கொள்ள மேலும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந் நன்கொடை பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவர் Dr. (திருமதி) ருவினி ரசிகா பெரேராவினால் வைத்தியசாலையின் […]

உலகம் செய்தி

கனடாவில் 6,000 திறமையான தொழிலாளர்களுக்கு கனடா நிரந்தர வதிவிட அழைப்பு

  • December 14, 2025
  • 0 Comments

கனடாவில் நிரந்தர வதிவிட உரிமம்: 6,000 திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு சுமார் 6,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமத்துக்கு விண்ணப்பிக்க கனடா அழைப்பு விடுத்துள்ளது . கனடா அரசு, கனேடியன் எக்ஸ்பிரியன்ஸ் க்ளாஸ் எக்ஸ்ப்ரஸ் என்ட்ரி (Canadian Experience Class Express Entry) திட்டத்தின் கீழ், வெளிநாட்டுத்திறமையான தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமத்திற்கான விண்ணப்ப அழைப்புகளை வழங்கியுள்ளது. இதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் இதுவரை ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட நிரந்தர வதிவிட […]

உலகம் செய்தி

முதியோர் படுக்கை தட்டுப்பாடு: மருத்துவமனைக்குள் 3,000 பேர் அவதி!

  • December 14, 2025
  • 0 Comments

அவுஸ்ரேலியாவில் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படத் தகுதியான 3,000க்கும் மேற்பட்ட முதியோர் பராமரிப்பு நோயாளிகள், முதியோர் பராமரிப்பு படுக்கைகள் இல்லாததால் பொது மருத்துவமனைகளிலேயே சிக்கித் தவிக்கின்றனர். மூன்று மாதங்களில் இந்த எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்சினை காரணமாக வரி செலுத்துவோருக்கு ஆண்டுக்கு $1.2 பில்லியன் செலவு ஏற்படுவதாக மாநில அரசுகள் தெரிவிக்கின்றன. இந்த நோயாளிகள் கீழே விழுதல் மற்றும் மனநலப் பிரச்சினைகளுக்கும் உள்ளாகின்றனர். அவுஸ்ரேலியா மத்திய சுகாதார அமைச்சர் Mark Butler, இது ஒரு தீவிரமான தேசியப் […]

உலகம் செய்தி

எரிசக்திச் செலவு: டோமாகோ அலுமினிய ஆலைக்கு அவுஸ்ரேலிய அரசு உதவி.

  • December 14, 2025
  • 0 Comments

அவுஸ்ரேலியாவின் முக்கிய டோமாகோ அலுமினிய உருக்காலை மூடப்படும் (Tomago Aluminium Smelter) அபாயத்தில் இருந்து மீண்டுள்ளது. அதிகரித்து வரும் எரிசக்திச் செலவுகள் காரணமாக ஆலை மூடப்படும் என்று அதன் உரிமையாளர் ரியோ டின்டோ (Rio Tinto) அறிவித்திருந்தார். இந்நிலையில், பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ( Anthony Albanese) தலைமையிலான மத்திய அரசு ஒரு முக்கிய ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், வரி செலுத்துவோரின் நிதியைப் பயன்படுத்தி மலிவு விலையில் மின்சாரம் வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்த நடவடிக்கை […]

error: Content is protected !!