இலங்கை செய்தி

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது!

  • December 15, 2025
  • 0 Comments

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CEYPETCO) முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2017–2018 ஆண்டுகளுக்கான எரிபொருள் கொள்முதல் செய்வதற்காக திட்டமிடப்பட்டிருந்த மூன்று நீண்டகால டெண்டர்களை இரத்து செய்து, அதற்கு பதிலாக அதிக விலைக்கு ஸ்பாட் டெண்டர்களை மேற்கொண்டதன் மூலம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கிட்டத்தட்ட 800 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது […]

ஐரோப்பா செய்தி

லூவ்ரே அருங்காட்சியகத்தில் (Louvre Museum) தலைத்தூக்கியுள்ள மற்றுமொரு பிரச்சினை!

  • December 15, 2025
  • 0 Comments

லூவ்ரே அருங்காட்சியகத்தில் (Louvre Museum) சமீபத்தில் இடம்பெற்ற கொள்ளை மற்றும், நீர் கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளை தொடர்ந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இடம்பெற்ற வாக்கெடுப்பில் சுமார் 400 தொழிலாளர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டதாக  CFDT தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட அருங்காட்சியகம் திட்டமிட்டபடி திறக்கப்படவில்லை என்றும் பார்வையாளர்கள்  திருப்பி அனுப்பப்பட்டதாகவும்  லூவ்ரேவின் (Louvre Museum)  வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த வாரம் தொழில்  சங்கங்களுக்கும்,  […]

இந்தியா

டெல்லியில் உச்சம் தொட்ட காற்று மாசுப்பாடு – 40 விமானங்கள் இரத்து!

  • December 15, 2025
  • 0 Comments

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், நச்சுப் புகைமூட்டம் சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக ஏறக்குறைய 40 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. டஜன் கணக்கான விமானங்கள் தாமதமாகின. புதுடெல்லியில் இருந்து புறப்படும்  50இற்கும் மேற்பட்ட ரயில்கள் பல மணிநேரம் தாமதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுவாசக் கஷ்டங்கள் மற்றும் கண் எரிச்சல் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மருத்துவமனைகளில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்  மக்கள் அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. டெல்லியின் காற்று […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு எவ்வளவு? புள்ளி விபரம் கோருகிறது ஐதேக!

  • December 15, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்கப்படும் என்பன தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவே இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, “ 6 ஆயிரம் வீடுகள் முழுமையாக சேதமடைந்திருந்தால் 6 ஆயிரம் கோடி ரூபா வழங்கப்பட வேண்டும். இது எவ்வாறு கையளிக்கப்படும்? பகுதியளவு […]

உலகம் பயணம்

உலகின் நீண்ட வணிக விமானப் பாதையை கடந்து சாதனை படைத்த சீனா!

  • December 15, 2025
  • 0 Comments

உலகின் மிக நீண்ட வணிக விமானப் பாதையை சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் (China Eastern Airlines ) 29 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளது. டிசம்பர் 4 ஆம் திகதி ஷாங்காயிலிருந்து புறப்பட்ட விமானம், 12,400 மைல்களை குறிப்பிட்ட நேரத்தில் கடத்துள்ளது. எரிபொருள் நிரப்புதல் மற்றும் பணியாளர் சுழற்சிக்காக நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நிறுத்தப்பட்ட பிறகு, மீண்டும் அர்ஜென்டினாவின் (Argentina) பியூனஸ் அயர்ஸை (Buenos Aires) வந்தடைந்துள்ளது. 316 இருக்கைகள் கொண்ட போயிங் 777-300ER மூலம் இயக்கப்படும் […]

இலங்கை

சிட்னி தாக்குதல் – இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை!

  • December 15, 2025
  • 0 Comments

சிட்னியின் போண்டி கடற்கரையில் நேற்று நடந்த யூத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இலங்கையர்கள் யாரும் காயமடையவில்லை என்பதை வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர உறுதிப்படுத்தியுள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர்,  இந்த விவகாரம் குறித்து மேலும் ஆராய்ந்து வருவதாகவும், மேலும் தகவல்களைச் சேகரிப்பதாகவும் கூறினார். சிட்னியின் மிகவும் பிரபலமான கடற்கரையான போண்டி கடற்கரையில் நடந்த யூத பண்டிகை கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பதினாறு பேர் […]

அரசியல் இலங்கை செய்தி

மக்கள் என்னுடன் “செல்பி” எடுக்கின்றனர்: அடுத்த ஜனாதிபதி நான் தானா?

  • December 15, 2025
  • 0 Comments

மக்கள் மத்தியில் எனக்கு செல்வாக்கு இருந்தாலும் ஜனாதிபதி பதவிக்கு வரவேண்டும் என்ற கனவு ஒருபோதும் கிடையாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நாம் கட்டியெழுப்ப வேண்டும். அடுத்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாவிட்டால்கூட குறைந்தபட்சம் 25 எம்.பிக்களாவது கட்சி […]

அரசியல் இலங்கை செய்தி

சுதந்திரக்கட்சி யாப்பில் விரைவில் திருத்தம்! சாமரவுக்கு புதிய பதவி!

  • December 15, 2025
  • 0 Comments

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு சிரேஸ்ட உப தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மற்றும் மத்திய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நியமனங்களும் விரைவில் வழங்கப்படவுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாப்பை மறுசீரமைப்பது பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. உள் கட்சி ஜனநாயகத்தை […]

உலகம்

கொலம்பியாவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – பலர் பலி!

  • December 15, 2025
  • 0 Comments

வடக்கு கொலம்பியாவின் கிராமப்புறப் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பாறையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்தாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதாக துணை ஆளுநர் ஆண்ட்ரெஸ் ஜூலியன் (Andres Julian)  உறுதிப்படுத்தியுள்ளார். விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார். கரீபியன் நகரமான டோலுவிலிருந்து (Tolu ) மெடலினுக்குப் (Medellin) பயணித்துக்கொண்டிருந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக அவர் தெரிவித்துள்ளார். விபத்து குறித்த விசாரணைகள் […]

இலங்கை

பயண அட்டை – பாடசாலை மாணவர்களுக்கு விசேட சலுகை!

  • December 15, 2025
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் நாளைய தினம் பாடசாலைகள் மீளவும் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் மாணவர்கள் கடந்த நவம்பர் மாதத்திற்கான பயண அட்டையை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய அறிவிப்பை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துணை அமைச்சர் பிரசன்ன குணசேன அறிவித்துள்ளார். இதேவேளை பேரிடரால் பாதிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகளை மீட்டெடுக்க நிதி திரட்டும் நோக்கில் ஆசிரியர்கள் ஜனவரி மாதத்தில் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கத் தயாராக இருப்பதாக துணை அமைச்சர் மஹிந்த […]

error: Content is protected !!