அமெரிக்காவில் வீடற்றோர் வெளியேற மறுத்தால் சிறை – டிரம்ப் அறிவிப்பால் சர்ச்சை
வொஷிங்டனில் வீடற்றோரை வெளியேற்றும் நடவடிக்கைக்கு இணங்க மறுத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என டிரம்ப் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ‘தலைநகர் வொஷிங்டனில் வன்முறைக் கும்பல்கள், இரக்கமற்ற குற்றவாளிகள், போதைக்கு அடிமையான மனநோயாளிகள் அதிகளவில்’ ஆக்கிரமித்துள்ளனர். அவர்களிடமிருந்து நகரை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து வொஷிங்டனில் வீடற்றோர் தங்களது தற்காலிக இருப்பிடங்களை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுவார்கள். அவர்களுக்கு மாற்று இருப்பிடமாக முகாம்களுக்குச் செல்லுதல், […]













