உலகம் செய்தி

ஈரானிலிருந்து வந்த கப்பலை இந்திய பெருங்கடலில் வழிமறித்த அமெரிக்கா!

  • April 23, 2026
  • 0 Comments

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பலொன்றை அமெரிக்கப் படைகள், இந்தியப் பெருங்கடலில் வைத்து வழிமறித்துள்ளன. மெஜஸ்டிக் எக்ஸ் என்ற பெயருடைய கப்பலில் ஏறி அமெரிக்க ராணுவத்தினர் தீவிரமான சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். ஈரானுக்குத் தேவையான பொருள் உதவிகளை வழங்கும் சந்தேகத்திற்குரிய கப்பல்களைத் இவ்வாறு தொடர்ந்து கண்காணித்து தடுத்து நிறுத்தப்போவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. சர்வதேச சட்டங்களை மீறும் மற்றும் விரோதப் போக்குடைய கப்பல்களைக் கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாக இந்த கடல்சார் தலையீடு அமைந்துள்ளது என அமெரிக்க […]

செய்தி தமிழ்நாடு

தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரம் –   82.24% வாக்குப் பதிவு

  • April 23, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 82.24% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 89.32% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 73.44% வாக்குகள் பதிவாகியுள்ளன. தலைநகர் சென்னையில் மாலை 5 மணி நிலவரப்படி 81.34% வாக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் தொகுதி ரீதியாக சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் அதிகபட்சமாக 87.12% வாக்குகளும், குறைந்தபட்சமாக மயிலாப்பூரில் 72.79% வாக்குகளும் பதிவாகியுள்ளன. வழமைபோன்று காலையில் […]

இலங்கை செய்தி

நிதி அமைச்சின் சைபர் மோசடி விசாரணை – இலங்கைக்கு அவுஸ்திரேலியா ஒத்துழைப்பு

  • April 23, 2026
  • 0 Comments

அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய கடன் கொடுப்பனவுகளில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி அமைப்பினுள் ஊடுருவியமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய தூதரகம் மற்றும் நிதி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளன. அவுஸ்திரேலிய ஏற்றுமதி நிதி முகவர் நிறுவனம் (Australian Export Finance Agency) மற்றும் திறைசேரிக்கு இடையில் பரிமாறப்பட்ட மின்னஞ்சல்களை ஹேக்கர்கள் இடைமறித்து, வங்கி கணக்கு இலக்கங்களை மாற்றி பணத்தை தமது கணக்குகளுக்கு திசை திருப்பியுள்ளனர். இந்தியாவுக்கு செலுத்த வேண்டிய கொடுப்பனவிலும் […]

உலகம் செய்தி

ஹோர்முஸ் நீரிணையில் பெரும் பதற்றம் : அமெரிக்கா–ஈரான் இடையே பேச்சுவார்த்தைகளும் தோல்வி

  • April 23, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணையை சுற்றியுள்ள இரு தரப்பு முற்றுகைகள் காரணமாக, சர்வதேச பேச்சுவார்த்தைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அமெரிக்காவும் ஈரானும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காத நிலையில், பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது. இந்த முற்றுகையால் ஏற்படும் பொருளாதார அழுத்தம், ஈரானை சமரசத்திற்கு கொண்டு வரும் என அமெரிக்கா நம்புகிறது. ஆனால், அதன் தாக்கம் பொதுமக்களின் வாழ்வில் தீவிரமாகப் பிரதிபலிக்கிறது. வேலை இழப்பு மற்றும் விலையேற்றம் குறித்து மக்கள் கவலை வெளியிடுகின்றனர். இந்நிலையில், ஈரான் தனது நிலைப்பாட்டை மாற்ற […]

செய்தி தமிழ்நாடு

ஸ்டாலின் 2 ஆவது முறையாக ஆட்சியமைக்கப் போவது உறுதி – பிரேமலதா நம்பிக்கை

  • April 23, 2026
  • 0 Comments

மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கப் போவது உறுதி என்றும் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, தனது மகன்களுடன் வாக்களித்தார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  அவர், “ தமிழகம் முழுவதும் தேமுதிக 10 இடங்களில் போட்டியிடுகிறது. எங்களின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிச்சயமாக இந்த தேர்தலில் மகத்தான வெற்றி […]

உலகம் செய்தி

எரிசக்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: IEA தலைவர் எச்சரிக்கை!

  • April 23, 2026
  • 0 Comments

உலகளாவிய எரிசக்தி பாதுகாப்புக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச எரிசக்தி முகமையின் International Energy Agency (IEA) தலைவர் Fatih Birol எச்சரிக்கை விடுத்துள்ளார். போர்ச்சூழ்நிலையால் நாளாந்தம் சுமார் 13 மில்லியன் பெரல் எண்ணெய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் விளைவாக எரிபொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட தாக்கங்கள் ஏற்படக்கூடும். இந்த நெருக்கடியைச் சமாளிக்க உலக நாடுகள் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் எனவும் IEA தலைவர் எதிர்வுகூறியுள்ளார். […]

இந்தியா

சென்னையில் பதிவான வாக்குவீதம்!

  • April 23, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகின்ற  நிலையில் தொகுதிவாரியாக பதிவான வாக்குவீதம் குறித்த தகவல்கள் வெளியாகிவருகின்றன. அந்தவகையில் சென்னையில் தொகுதி வாரியாக பதிவான வாக்கு விகிதம் வருமாறு, அண்ணா நகர் தொகுதி -56.61% வாக்குப்பதிவு. சேப்பாக்கம் தொகுதி- 53.55% வாக்குப்பதிவு. ஆர்.கே.நகர் – 55.68% வாக்குப்பதிவு. எழும்பூர் – 53.67% வாக்குப்பதிவு. துறைமுகம்- 54.39% வாக்குப்பதிவு. கொளத்தூர் -56.59% வாக்குப்பதிவு. மயிலாப்பூர் – 48.86% வாக்குப்பதிவு. பெரம்பூர் – 56.24% வாக்குப்பதிவு. ராயபுரம் – 49.67% வாக்குப்பதிவு. […]

உலகம் செய்தி

ஈரான் வசமுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மீட்பதில் ட்ரம்ப் உறுதி!

  • April 23, 2026
  • 0 Comments

  ஈரான் வசமுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ட்ரம்ப் உறுதியாக உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அதேபோல ஒரு தரமான மற்றும் நிரந்தரமான ஒப்பந்தத்தை எட்டுவதே ட்ரம்பின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் தரப்பிலிருந்து உறுதியான பதில் வராத காரணத்தினாலேயே போர் நிறுத்த காலக்கெடுவை நீட்டிக்க டிரம்ப் முடிவு செய்தார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளை, அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் 2ஆம் கட்ட அமைதி பேச்சை ஆரம்பித்து […]

இலங்கை

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

  • April 23, 2026
  • 0 Comments

இந்தியாவின் ‘கிரிஷ்’நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பான விவகாரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை மே மாதம் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட முன்னிலையில் இந்த வழக்கு இன்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதற்காக எனக் கூறி, இந்திய கிரிஷ் நிறுவனத்திடம் இருந்து 70 மில்லியன் ரூபாயைப் […]

இந்தியா

வாக்குச்சாவடியில் கத்திக்குத்து தாக்குதல் – வாக்களிப்பை புறக்கணித்த மக்கள்!

  • April 23, 2026
  • 0 Comments

பட்டியலின சமூக மக்கள் வாக்களிப்பை புறக்கணித்துள்ளனர். இதன்காரணமாக வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் நீதி கிடைக்கவில்லை எனக் கூறியே வாக்களிப்பை புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே வாக்குச்சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு அதிகாரிகள் மீது கத்திக் குத்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை பொறையார் ஜமாலியா நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.    

error: Content is protected !!