இலங்கை: வாகன விபத்தில் வீதியில் நடந்து சென்ற மாணவி மற்றும் லொறி சாரதி மரணம்
ஹொரவ்பொத்னை – கஹடகஸ்திகிலிய பிரதான வீதியில் உள்ள அலப்பத்தாவ சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவி ஒருவரும் சாரதி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹொரவ்பொத்னை – மொரக்கேவ சிங்கள மஹா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 10 வயது சிறுமியும் 27 வயதுடைய சாரதியுமே உயிரிழந்துள்ளனர். ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவின் மொரக்கேவ சந்தியிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அலப்பத்தாவ பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்து அனுராதபுரத்திற்கு கண்ணாடிகளை ஏற்றிச் சென்ற […]













