இலங்கை

இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு

  • September 2, 2025
  • 0 Comments

இன்று மீண்டும் 2000 ரூபாயால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், நேற்று தங்கம் பவுண் ஒன்றிற்கு 6000 ரூபாயால் அதிகரித்திருந்த நிலையில், மீண்டும் பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை 274,000 ரூபாயாக இருந்த 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, நேற்று 280,000 ரூபாயாக அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தது. இந்த நிலையில் இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றிற்கு 2000 ரூபாயால் அதிகரித்து, […]

உலகம்

உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டும் – புட்டினிடம் மோடி வலியுறுத்தல்

  • September 2, 2025
  • 0 Comments

உக்ரைனுக்கு எதிரான போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புடினை வலியுறுத்தினார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது 2022ல் ரஷ்யா தொடர்ந்த போர், தற்போதும் தொடர்கிறது. இந்தப் போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், சீனாவின் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டுக்கு இடையே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை, பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். அப்போது, இருதரப்பு உறவுகள், உக்ரைன் போர் உட்பட உலகளாவிய […]

உலகம்

வட கொரியாவிற்கு ஒளிபரப்பாகும் இராணுவ வானொலி நிலையத்தை நிறுத்திய தென் கொரியா

  • September 2, 2025
  • 0 Comments

வட கொரியாவிற்கு ஒளிபரப்பாகும் தனது இராணுவ வானொலி நிலையத்தை நிறுத்த தென் கொரியா நடவடிக்கை எடுத்துள்ளது. தென் கொரியா 15 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் ‘சுதந்திரத்தின் குரல்’ வானொலி நிலையத்தை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. வட கொரியாவுடனான இராணுவ பதட்டங்களைக் குறைத்து நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் தென் கொரியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 2010 ஆம் ஆண்டு வட கொரியா தென் கொரிய போர்க்கப்பலை மூழ்கடித்த பிறகு இந்த வானொலி நிலையம் தொடங்கப்பட்டது. சுதந்திரத்தின் குரல் இராணுவ […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைப்பட்ச பேரழிவு – டிரம்ப் ஆவேசம்

  • September 2, 2025
  • 0 Comments

இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளதால், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகள் பதற்றமான நிலைக்கு சென்றுள்ளன. இந்தச் சூழலில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இந்தியா தொடர்பாக ஆவேசமாக கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது: “இந்தியா தனது வரிகளை குறைக்க முன்வந்துள்ளது. ஆனால் இது மிகவும் தாமதமாகும். ஏனெனில், இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் ராணுவப் பொருட்களை அதிகமாக வாங்குகிறது, ஆனால் அமெரிக்காவிலிருந்து மிகவும் குறைவாகவே வாங்குகிறது. […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மைக்ரோசாப்ட் லென்ஸ் ஆப் நிறுத்தம்

  • September 2, 2025
  • 0 Comments

மைக்ரோசாஃப்ட் லென்ஸ் பயனுள்ள செயலியாக இருந்தாலும், அதற்கு மாற்றாக நீங்கள் பயன்படுத்தக்கூடிய பல சிறந்த PDF ஸ்கேனர் ஆஃப்கள் உள்ளன. டிஜிட்டல் முறையில் ஆவணங்களில் கையெழுத்திடுவது, புத்தக பக்கங்களை ஸ்கேன் செய்வது (அ) ரசீதுகளைப் பாதுகாப்பது போன்ற வேலைகளுக்கு உதவும் 5 சிறந்த PDF ஸ்கேனர் ஆஃப்கள் பற்றி பார்ப்போம். 1. OneDrive மைக்ரோசாஃப்ட் லென்ஸ் ஆஃப்-க்கு ஒரு சிறந்த மாற்று OneDrive. இதில் லென்ஸ் ஆஃப்பின் முக்கிய அம்சங்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன. லென்ஸ் இலவசமாக இருந்தாலும், […]

ஆசியா

சீனா வந்தடைந்த வட கொரிய தலைவர்

  • September 2, 2025
  • 0 Comments

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் சீனா வந்தடைந்தார். சிறப்பு கவச ரயிலில் வட கொரிய தலைவர் சீன எல்லைக்குள் நுழைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் 2019 க்குப் பிறகு முதல் முறையாக சீனாவுக்கு வருகை தருகிறார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஒரு நாட்டிற்கு அதிகாரப்பூர்வ பயணத்தில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. வட கொரிய தலைவர் வெளிநாட்டு பயணங்களில் பங்கேற்பது ஒரு அரிய நிகழ்வாகும், மேலும் அவர் கடைசியாக […]

விளையாட்டு

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் ஓய்வு

  • September 2, 2025
  • 0 Comments

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க் அறிவித்தார். 2012 முதல் 2024 வரை 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டார்க், 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மிச்செல் ஸ்டார்க் கடைசியாக 2024 ஜூன் 24ல் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடினார். கடைசியாக விளையாடிய இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் ஸ்டார்க் 4 ஓவர்களில் 45 ரன்களை கொடுத்தார்.

உலகம்

சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி

  • September 2, 2025
  • 0 Comments

மேற்கு சூடானின் மாரா மலைகள் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். டார்பூரை உள்ளடக்கிய இந்தப் பகுதியைக் கட்டுப்படுத்தும் சூடான் விடுதலை முன்னணி, நிலச்சரிவில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாகக் கூறியது. ஆகஸ்ட் 31 அன்று நிலச்சரிவு ஏற்பட்டது, ஆனால் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கைகள் இன்று வெளியிடப்பட்டன. இறந்தவர்களின் உடல்களை மீட்க ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச நிவாரண நிறுவனங்கள் உதவி வருகின்றன.

இலங்கை

இலங்கை காலநிலை தொடர்பில் எச்சரிக்கை

  • September 2, 2025
  • 0 Comments

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த […]

ஐரோப்பா

சாட்ஜிபிடியை நம்பி பயணம் செய்த ஸ்பெயின் நாட்டவருக்கு விமான நிலையத்தில் சிக்கல்

  • September 2, 2025
  • 0 Comments

ஸ்பெயின் நாட்டவர் ஒருவர் போர்ட்டோ ரிக்கோவுக்கு செல்லும் ஆவணங்கள் தேவையா என்பதை சாட்ஜிபிடியிடம் கேட்டு பயணித்து சிக்கலில் சிக்கியுளளார். ஆனால், விமான நிலையத்தில் அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியபோதுதான் தகவல் தவறானது என்பதை அவர் உணர்ந்தார். இந்த சம்பவத்தை அவர் TikTok-இல் காணொளியாக பகிர்ந்துள்ளார். கண்ணீருடன் தோன்றும் அவரை இணையத்தில் பெரும்பாலானவர்கள் ஆறுதல் கூறவில்லை. மாறாக, தேவையான அதிகாரப்பூர்வ தகவல்களை சரிபார்க்காமல் செயற்கை நுண்ணறிவைப் பின்பற்றியதற்காக கடுமையாக விமர்சித்தனர். “அரசாங்க இணையதளங்களை பார்த்திருக்க வேண்டியது” என்றும், “AI […]

error: Content is protected !!