செய்தி வட அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக மைக்கேல் வால்ட்ஸ் நியமனம்

  • September 19, 2025
  • 0 Comments

அமெரிக்க செனட், ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸை ஐ.நாவுக்கான அமெரிக்க தூதராக நியமித்துள்ளது. 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட்டில் 47க்கு 43 என்ற வாக்குகள் என்ற அடிப்படையில் வால்ட்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பத்து செனட்டர்கள் வாக்களிக்கவில்லை. டிரம்ப் நிர்வாகத்தில் சேருவதற்கு முன்பு, வால்ட்ஸ் கிழக்கு-மத்திய புளோரிடாவிலிருந்து குடியரசுக் கட்சி காங்கிரஸ் உறுப்பினராக மூன்று முறை பணியாற்றினார், மேலும் முன்னதாக ஜார்ஜ் டபிள்யூ. புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்களின் கீழ் பென்டகனின் […]

ஆசியா செய்தி

இந்தோனேசியாவில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் உக்ரைன் நாட்டவருக்கு ஆயுள் தண்டனை

  • September 19, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் பாலி சுற்றுலாத் தீவில் ஒரு பெரிய அளவிலான ரஷ்ய-உக்ரைன் போதைப்பொருள் வளையத்தில் ஈடுபட்டதற்காக உக்ரைன் நாட்டவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்டர்போலால் தப்பியோடியவராக பட்டியலிடப்பட்ட ரோமன் நசரென்கோவை, கடந்த டிசம்பர் மாதம் பாங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றபோது தாய்லாந்து அதிகாரிகள் கைது செய்தனர், பின்னர் அவர் இந்தோனேசியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். மே 2024ல் பாலியில் உள்ள ஒரு விடுமுறை வில்லாவை பொலிசார் சோதனை செய்த பின்னர் கஞ்சா பயிரிடவும் செயற்கை […]

ஐரோப்பா செய்தி

எஸ்தோனியாவின் வான்வெளியில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள்

  • September 19, 2025
  • 0 Comments

மூன்று சூப்பர்சோனிக் போர் விமானங்கள் மூலம் ரஷ்யா தனது வான்வெளியை அத்துமீறி நுழைந்ததாக எஸ்தோனியா தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சர் மார்கஸ் சாக்னா, மூன்று மிக்-31 விமானங்கள் எஸ்தோனிய வான்வெளியில் நுழைந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையை “விரைவான அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தத்துடன்” எதிர்கொள்ள வேண்டும் என்று Xல் மார்கஸ் சாக்னா தெரிவித்துள்ளார். மேலும், நேட்டோ செய்தித் தொடர்பாளர் அலிசன் ஹார்ட் இது மாஸ்கோவின் “பொறுப்பற்ற நடத்தை” என்று குற்றம் சாட்டியுள்ளார். பின்லாந்து வளைகுடாவில் அமைந்துள்ள வைண்ட்லூ தீவு […]

செய்தி விளையாட்டு

Asia Cup M12 – இந்திய அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

  • September 19, 2025
  • 0 Comments

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, ஓமனை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற இந்தியா துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 188 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 56 ஓட்டங்கள் எடுத்தார். தொடர்ந்து 189 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற ஓமன் அணி களம் இறங்கியது. ஓமன் வீரர்களான ஹம்மாத் மிர்சா மற்றும் ஆமிர் […]

ஆசியா செய்தி

சூடானில் மசூதி மீது ட்ரோன் தாக்குதல் – 78 பேர் உயிரிழப்பு

  • September 19, 2025
  • 0 Comments

சூடானின் டார்ஃபர் பகுதியில் உள்ள ஒரு மசூதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். எல்-ஃபாஷர் நகரில் நடந்த தாக்குதலுக்கு துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (RSF) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, ஆனால் தாக்குதல் குறித்து அந்தக் குழு பொறுப்பேற்கவில்லை. தொழுகையின் போது ட்ரோன் தாக்கியதில் மக்கள் கொல்லப்பட்டதாக குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சூடானில் RSF மற்றும் இராணுவம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றது.

இந்தியா செய்தி

மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு நெரிசலில் சிக்கி உயிரிழந்த குழந்தை

  • September 19, 2025
  • 0 Comments

மும்பை – அகமதாபாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் 16 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது போக்குவரத்து நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளது. தானே-கோட்பந்தர் சாலையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நெரிசல் ஏற்பட்டது. கடுமையான இடுப்பு காயங்களுடன் காணப்பட்ட அந்தக் குழந்தை, நைகானில் உள்ள சின்சோட்டியில் உள்ள கேலக்ஸி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலதிக சிகிச்சைக்காக மும்பையில் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தெலுங்கானாவைச் சேர்ந்த 30 வயது நபர்

  • September 19, 2025
  • 0 Comments

கலிபோர்னியாவில் 30 வயது இந்திய தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் தனது அறையில் தங்கியிருந்த நண்பர் ஒருவரை கத்தியால் குத்தியதாகக் கூறி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தெலுங்கானாவின் மஹபூப்நகரைச் சேர்ந்த முகமது நிஜாமுதீன், செப்டம்பர் 3ம் திகதி சாண்டா கிளாராவில் உள்ள அவரது வீட்டிற்குள் கத்தியுடன் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். முகமது நிஜாமுதீன் தனது அறைத் தோழரைப் பிடித்துக் கொண்டிருந்ததாகவும், அவருக்கு பல காயங்கள் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டிற்குள் நடந்த கத்திக்குத்து சம்பவம் குறித்து 911 […]

இந்தியா செய்தி

90% மதிப்பெண் பெற்ற மாணவர்களை விமானத்தில் அழைத்து சென்ற ராஜஸ்தான் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

  • September 19, 2025
  • 0 Comments

ராஜஸ்தானில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் சமீபத்தில் 12ம் வகுப்பு தேர்வுகளில் 90% க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றதற்காக விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்தப் பயணத்திற்கு அரசாங்கமோ அல்லது எந்த அரசு சாரா நிறுவனமோ நிதியுதவி செய்யவில்லை, ஆனால் பள்ளியின் அதிபர் சங்கர்லால் ஜாட் மற்றும் ஆசிரியர் அஜய் குமார் ஆகியோர் முழுமையாக நிதியுதவி செய்துள்ளனர். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஆசிரியர்கள் முழு பயணத்திற்கும் ஏற்பாடு செய்து பில்வாராவின் நந்த்ராய் கிராமத்திலிருந்து […]

ஆசியா செய்தி

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களை தடை செய்த தலிபான்

  • September 19, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களை தலிபான் அரசாங்கம் தடை செய்துள்ளது. மேலும் மனித உரிமைகள், பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்கள் படிப்புகள் உள்ளிட்ட பதினெட்டு பல்கலைக்கழக பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. பெண்களால் எழுதப்பட்ட 140 பாடப்புத்தகங்களும், ஈரானிய எழுத்தாளர்களால் எழுதப்பட்ட 310 பாடப்புத்தகங்களும் உட்பட மொத்தம் 679 பாடப்புத்தகங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. தடைசெய்யப்பட்ட படைப்புகளில் வேதியியல் ஆய்வகத்தில் பாதுகாப்பு, உலகமயமாக்கல்: ஒரு விமர்சன அறிமுகம், ஒப்பீட்டு மனித உரிமைகள் மற்றும் சமூகவியல், சட்டம் மற்றும் பத்திரிகைத் துறையில் பல முக்கிய […]

உலகம் செய்தி

ஐரிஷ் ராப் இசைக் குழுவுக்கு தடை விதித்த கனடா

  • September 19, 2025
  • 0 Comments

பிரபல ஐரிஷ் ராப் இசைக்குழுவான நீகேப், அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகக் கூறி கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை டொரண்டோ நாடாளுமன்ற உறுப்பினர் வின்ஸ் காஸ்பாரோ Xல் பதிவிட்டுள்ளார். “கனடாவிற்குள் நுழைய நீகேப் குழுவிற்கு தகுதி இல்லை என்று தீர்மானித்துள்ளோம். அரசியல் வன்முறையை ஆதரிப்பது, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது, யூத விரோத கருத்துகள் மற்றும் வெறுப்புரைகளை எங்கள் அரசு நிராகரிக்கும்” என்று அவர் பதிவிட்டுள்ளார். மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்த குழு அக்டோபரில் டொரண்டோ […]

error: Content is protected !!