செய்தி

பலஸ்தீனத்தை ஆதரிக்கும் உலக நாடுகள் – காசா மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்

  • September 21, 2025
  • 0 Comments

உலக நாடுகளை பழிவாங்கும் நோக்கில் காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன பலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்கும் உடன்படிக்கைக்கு ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், கனடா உட்பட 10 நாடுகள் நாளையதினம் ஆதரவு தெரிவிக்கவுள்ளன. ஐ.நா பொதுச்சபையில் பலஸ்தீனம் தொடர்பான வாக்கெடுப்பின் போது இந்த நாடுகள் ஆதரவை வெளிப்படுத்தவுள்ளனர். இந்நிலையில் பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்றையதினம் நடத்திய தாக்குதல் சுமார் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. […]

செய்தி

கட்டுநாயக்க விமான நிலைய கழிப்பறைக்குள் சிக்கிய மர்மம் – காட்டிக்கொடுத்த நபர்

  • September 21, 2025
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தின் ஆண்கள் கழிப்பறைக்குள் இருந்து போதைப்பொருள் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 18.5 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கழிப்பறைக்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் பல பொதிகள் இருந்தமையை துப்புரவு பணியாளர் ஒருவர் கண்டுள்ளார். இது குறித்து விமான நிலைய சுங்க போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதன்போது பொதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 422 […]

இலங்கை

அமெரிக்கா செல்லும் இலங்கை ஜனாதிபதி – பல்வேறு அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை

  • September 21, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாளையதினம் அமெரிக்கா நோக்கி பயணமாகவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அமர்வில் கலந்து கொள்ளும் நோக்கில் அவரின் விஜயம் அமைந்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஐ.நா சபையில் அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார். இந்த விஜயத்தின் போது பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதன்போது இலங்கையின் சமகால முன்னேற்றம் குறித்தும் தெளிவுபடுத்தவுள்ளார். அதேவேளை அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தத்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு […]

ஆசியா

சீனாவில் பாம்புகள் நிறைந்த கிணற்றில் 54 மணி நேரம் உயிருக்கு போராடி உயிர் தப்பிய பெண்

  • September 21, 2025
  • 0 Comments

சீனாவின் பூஜியனில் கடுங்குளிர், பாம்புக்கடி, பசியை பொறுத்துக்கொண்ட பெண் ஒருவர் 54 மணிநேரம் கிணற்றுக்குள் போராடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 13ஆம் திகதி நடைப்பயிற்சி சென்ற சின் என்ற பெண் தடுமாறிக் கிணற்றுக்குள் விழுந்தள்ளார். சின் வீடு திரும்பவில்லை என்று வருந்திய குடும்பத்தினர் அவரை தேடத் தொடங்கினர். 15ஆம் திகதி அவர்கள் அங்குள்ள மீட்பு நிலையத்தின் உதவியை நாடியுள்ளனர். இரு நாட்களுக்குப் பின்னர் கிணற்றில் சிக்கிக்கொண்ட சின்னை அவர்கள் கண்டுபிடித்தனர். ஒரு மணி நேர மீட்பு நடவடிக்கைக்குப் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் காலநிலை – 1.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் ஆபத்தில்

  • September 21, 2025
  • 0 Comments

2050 ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயர்வால் 1.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா அதிக வருமானம் கொண்ட நாடாக இருந்தாலும், காலநிலையால் மிகவும் பாதிக்கப்படக்கூடியது என மோனாஷ் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதேவேளை, ஆஸ்திரேலியாவில் 2016 முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகதியில் கடுமையான வெப்பம் காரணமாக 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மெல்போர்னில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தின் புதிய ஆராய்ச்சியில் 4 வருட காலப்பகுதியில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கூகுளிடம் மக்கள் அதிகமாக கேட்ட கேள்வி தொடர்பில் வெளியான தகவல்

  • September 21, 2025
  • 0 Comments

கூகுளிடம் மக்கள் அதிகமாக கேட்ட கேள்வி தொடர்பில் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகளாவிய அளவில், மக்கள் கூகுளில் என்ன தேடுகிறார்கள் என்பது ஒரு சுவாரஸ்யமான விடயமாகும். மக்கள் தேடும் சில கேள்விகள் மிக பொதுவானவையாகும். ஆனால், சில கேள்விகள் மிகவும் தனித்துவமானவை. இந்த நிலையில் 2024 மற்றும் அதற்குமுன்னர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சில கேள்விகள் தொடர்பான விடயங்கள் வெளியிடப்பட்டுள்ளது. “என்ன பார்க்க வேண்டும்?” – 6,200,000 பேர் தேடியுள்ளனர் “எனது பணத்தைத் […]

விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட்! இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்

  • September 21, 2025
  • 0 Comments

ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றில் இன்று இரவு இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் மோதுகின்​றன. ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இந்த தொடர் தற்​போது சூப்​பர் 4 கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. இதில் இன்று இரவு 8 மணிக்கு துபா​யில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் மோதுகின்​றன. சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி லீக் சுற்​றில் 3 ஆட்​டங்​களி​லும் வெற்றி […]

மத்திய கிழக்கு

இனிமேல் நிவாரண மையங்களுக்கும் பாதுகாப்பு கிடையாது – பரபரப்பை ஏற்படுத்திய இஸ்ரேல் இராணுவம்

  • September 21, 2025
  • 0 Comments

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியில், எந்தப் பகுதிக்கும் தங்கள் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடையாது என்று இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது. மருத்துவமனைகள் தவிர்த்து நிவாரண மையங்கள் உள்ளிட்ட மற்ற எந்தப் பகுதியும் ஆபத்திலேயே உள்ளதென எச்சரிக்கப்பட்டுள்ளது. காஸா சிட்டியில் மருத்துவமனைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட இடங்களாகக் கருதப்படும். எனவே, மற்ற அனைத்து நிவாரண உள்கட்டமைப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாகலாம். எனவே, அங்கிருந்து அனைவரும் உடனடியாக வெளியேறவேண்டும் என இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது. ஏற்கெனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் […]

ஆசியா

பாகிஸ்தான் இராணுவத்தின் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை – ஐவர் காயம்

  • September 21, 2025
  • 0 Comments

பலுசிஸ்தானின் Khuzdar மாவட்டத்தில் Zehri tehsil பாகிஸ்தான் இராணுவத்தின் ஆளில்லா விமானத் தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர் என உள்ளூர் தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன. தாக்குதலுக்குப் பிறகும் அந்தப் பகுதிக்கு மேலே ட்ரோன்கள் பறந்து கொண்டிருந்ததால், குடியிருப்பாளர்கள் பீதியில் ஆழ்ந்தனர். பலுச் போராளிகளின் மறைவிடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தாக்குதலில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை மீட்டதாகவும், நான்கு […]

இலங்கை

மீண்டும் ஆரம்பிப்போம் என கூறி மஹிந்தவை பார்க்க படையெடுக்கும் மக்கள்

  • September 21, 2025
  • 0 Comments

நாட்டை பாதுகாத்து, சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தவரை தாம் பார்க்க வந்ததாக முன்னாள் ஜனாதிபதியை நேரில் சந்திக்க வந்த மக்கள் தெரிவித்துள்ளனர். விஜேராம இல்லத்தில் இருந்து தங்காலைக்கு சென்று வசித்து வரும் மஹிந்த ராஜபக்ஷவை காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவரது ஆதரவாளர்கள் செல்கின்றனர். அவரது ஆதரவாளர்கள் குழு தொடர்ந்து தங்காலை நோக்கி பயணிக்கின்றனர். “எத்தனை முறை காயப்படுத்தினாலும் மீண்டெழுவோம். சும்மா இருந்த சிங்கத்தை சீண்டி விட்டுட்டாங்க, நாங்கள் இங்கிருந்து மீண்டும் ஆரம்பிப்போம், அப்பச்சியின் மகன் எங்களோடு […]

error: Content is protected !!