இலங்கை செய்தி

பிளவுபட்ட சுதந்திரக் கட்சியினர் ஒரே மோடையில்

அரசியல் ரீதியாக பிளவுபட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 02 குழுக்களும் இன்று ஒரே மேடையில் சந்தித்துக்கொண்டனர்.

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 108வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போதே இந்த நிகழ்வு பதிவாகியுள்ளது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவு பெற்ற குழுவும், அமைச்சர் நிமல் சிறிபாலத சில்வாவை கொண்ட குழுவும்  இதன்போது  இணைந்துள்ளமை விசேட அம்சமாகும்.

எவ்வாறாயினும் அவர்கள் இருபுறமும் அமர்ந்திருந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவது நீதிமன்ற உத்தரவின் பேரில் தணிக்கை செய்யப்பட்டு, அமைச்சர் நிமல் சிறிபாலட சில்வா பதில் தலைவராக நியமிக்கப்பட்டார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை