ஐரோப்பா

பிரான்ஸில் மற்றுமொரு நெருக்கடி – மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பிரான்ஸ் மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் மின்கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது.

இதனால் பிரெஞ்சு மக்கள் மின்சார பாவனையை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் முதல் டிசம்பர் வரைக்குட்பட்ட நாட்களில் 7 தொடக்கம் 8 சதவீதம் வரை மின்பாவனையை குறைத்துள்ளனர்.

பணவீக்கம் காரணமாக மக்களிடையே வாங்கும் திறன் வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன், மின்கட்டணம் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதால் இந்த மின் பாவனை வீழ்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, ஜனவரி இரண்டாம் வாரம், கடும் குளிர் நிலவியிருந்த போது, பிரான்சின் மின்சார பாவனை 84 ஜிகாவட்ஸ் அளவை எட்டியிருந்தது.

ஜனவரி ஆரம்பத்தில் மின் தேவை அதிகமாக இருந்ததால் மூடப்பட்டிருந்த பல அணுமின் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன. ஜனவரி 9 ஆம் திகதி பிரான்சில் உள்ள 56 அணுமின் நிலையங்களில் 47 நிலையங்கள் இயக்கப்பட்டிருந்தன.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்