ஆசியா

பாகிஸ்தானில் 08 பேர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்றில் இருந்து எட்டு பேரைக் கடத்திச் சென்ற துப்பாக்கி ஏந்தியவர்களைக் பொலிஸார் தேடி வருவதாக அறிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (12.04) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் துணை ஆணையர் ஹபிபுல்லா மொசக்கைல் கூறுகையில், துப்பாக்கி ஏந்திய நபர்கள் முற்றுகையை ஏற்படுத்தினர், பின்னர் பேருந்தை நிறுத்தி பயணிகளின் அடையாள அட்டைகளை ஆய்வு செய்தனர்.

கிழக்கு பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த 8 பேரை மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலையில் இருந்து 5 கிலோமீட்டர் (3 மைல்) தொலைவில் உள்ள பாலத்தின் அடியில் எட்டு உடல்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.  குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக  மொசக்கைல் தெரிவித்துள்ளார்.

பலுசிஸ்தானில் கடத்தல்கள் அரிதாகவே நடைபெறுகின்றன, அங்கு தீவிரவாதிகள் பொதுவாக போலீஸ் படைகள் மற்றும் ராணுவ வீரர்கள் அல்லது உள்கட்டமைப்புகளை குறிவைக்கின்றனர்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்