இலங்கை

இலங்கையில் தலையில் தேங்காய் விழுந்ததில் 11 மாத குழந்தை பலி..!

தேங்காய் ஒன்று தலையில் விழுந்ததில் 11 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர். கலஹா, தெல்தோட்டை பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கலஹா தெல்தோட்டை நாரன்ஹின்ன தோட்டத்தில் வசிக்கும் லோகேஸ்வரன் கியாங்ஷினி என்ற சிறுமியே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

தந்தை சிறுமியை பக்கத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, ​​வீட்டின் முன்புறம் முப்பது அடி தூரத்தில் இருந்த தென்னை மரத்தில் இருந்து காய்ந்த காய் ஒன்று அவள் தலையில் விழுந்தது.

பின்னர் சிறுமியை முச்சக்கர வண்டியில் தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அந்த வைத்தியசாலையில் இருந்து சிறுமியின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இவர்கள் வசிக்கும் வரிசை வீடுகளுக்கு அருகாமையில் உள்ள தென்னை மரங்களில் இருந்தே தேங்காய் விழுந்ததாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!