இலங்கை

இலங்கையில் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு : 700இற்கும் மேற்பட்டோர் விடுதலை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 779 கைதிகள் அரச பொது மன்னிப்பின் கீழ் விடுதலை பெற உள்ளனர்.

சிறப்பு பொது மன்னிப்புக்கு தகுதியான 768 கைதிகளும் 11 பெண் கைதிகளும் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலிருந்தும் சம்பந்தப்பட்ட கைதிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு இன்று சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைதிகளின் உறவினர்கள் வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவு, இனிப்புகள் மற்றும் சுகாதார பொருட்களை வழங்க முடியும் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள விதிகள் மற்றும் முறையான சுகாதார நடைமுறைகளின் கீழ் உரிய பொருட்கள் கைதிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்