இலங்கைக்குள் நுழையும் மற்றும் வெளியேறுபவர்களை அடையாம் காண எல்லைக் கட்டுப்பாடு
நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நபர்களையும் அடையாளம் காணும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பை ஏற்படுத்துவதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
ஒருவர் குற்றம் செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றால், அதை உடனடியாக இந்த எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு தடுக்கும் வகையில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் தகவல்கள் இந்த அமைப்பில் உள்ளடக்கப்பட்டால், அத்தகைய நபர்கள் நாட்டிற்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ முயன்றால் தானாக அடையாளம் காண முடியும் என்பது இந்த நடவடிக்கையின் சிறப்பம்சமாகும்.
இவ்வாறான எல்லைக் கட்டுப்பாட்டு முறைமையை நாட்டிற்கு வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்த முறையை இலவசமாகப் பெற்றுக் கொள்வது தொடர்பாக அமெரிக்க அரசாங்கத்தின் தூதுக்குழுவினருடன் இராணுவப் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடியுள்ளனர்.