அமெரிக்காவில் மற்றுமோர் இந்து கோவிலும் அழிக்கப்பட்டது!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு இந்து கோவில் காலிஸ்தான் சார்பு அமைப்பினரால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக இந்து அமெரிக்க அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள ஸ்வாமிநாராயண் மந்திர் எனப்படும் ஆலயமே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அறக்கட்டளை கோயில் தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், காவல்துறையினர் அறிவித்துள்ளனர்த.
கடந்த மாதம், கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோவில் இடிபாடுகளுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்திருந்தது. குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைக்க நெவார்க் காவல் துறையின் முயற்சிகளை அது வரவேற்றிருந்தது.
இந்நிலையில் தொடர்ச்சியாக இந்து எதிர்ப்பு சம்பவங்கள் அங்கு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 7 times, 1 visits today)