இந்திய பெருங்கடலில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இலங்கைக்கும் பாதிப்பா?
இந்தியப் பெருங்கடலில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் நில்மினி தல்தேனா தெரிவித்தார்.
ஒரு நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகவும், இரண்டாவது நிலநடுக்கம் 5.8 ஆகவும் பதிவானது.
இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடலில் மாலைதீவுக்கு அருகில் பதிவாகியுள்ளது
(Visited 5 times, 1 visits today)