சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் – தயார் நிலையில் படையினர்
தென்கிழக்காசிய நாடுகளில் இருந்து வரும் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை தீவிர எச்சரிக்கையுடன் இருக்க முடிவு செய்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பின் மூலம் நாட்டிற்கு வரும் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அகதிகளின் அதிகரிப்பையும் எதிர்பார்க்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை, மக்கள் கடத்தல்காரர்களின் சூழ்ச்சிகளுக்கு இரையாவதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறது.
இது குறித்த வழிமுறைகள் அடங்கிய வீடியோவையும் 16 மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.
(Visited 8 times, 1 visits today)